மதுரைக் கவுணியன் பூதத்தனார்

மதுரைக் கவுணியன் பூதத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 74.

புலவர் பெயர் விளக்கம்

தொகு

கவுணியன்

தொகு
  • கவுள் = கன்னத்தின் உட்பகுதி, கடைவாய்

நெடுங்கழுத்துப் பரணர் கழுத்து உறுப்பால் பெயர் பெற்ற புலவர். அதுபோல இந்தப் புலவர் கவுள் உறுப்பால் பெயர் பெற்ற புலவர்.

சோழநாட்டில் வாழ்ந்த இந்தப் பார்ப்பானும் கழுத்து உறுப்பால் பெயர் பெற்றவன். இவன் ஒரு வள்ளளல்.

பூதத்தன்

தொகு

பூதங்கள் ஐந்து என்று திருக்குறள் குறிப்பிடுகிறது.271 பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் இந்தப் பூதங்கள் ஐந்தும் நமக்கு வெளியிலும், உடலுக்குள்ளும் இருக்கின்றன. இந்த உண்மையை உணர்ந்தவன் பூதத்தன்.[சான்று தேவை]

பாடல் சொல்லும் செய்தி

தொகு

தலைவன் பிரிந்த காலத்தில் வருந்தும் தலைவியைப் பொறுத்துக்கொள்ளுமாறு தோழி வற்புறுத்துகிறாள். தலைவி பொறுத்துக்கொள்ள முடியவில்லையே என்று தோழியிடம் சொல்லி வருந்துவதை இப்பாடல் சொல்கிறது.

கார்காலம்

தொகு
  • மூதாய் - குருதி சொட்டுச் சொட்டாக விழுந்து கிடப்பது போல வெல்வெட்டுத் துணி போல் மேனி பூத்திருக்கும் தம்பலப் பூச்சிகள் புறவு(முல்லை)நிலத்தில் மேய்கின்றன.
  • களர்மணல் பரப்பில் முல்லை வண்டுகள் உண்ணும்படி பூத்திருக்கிறது.
  • பிணைமான்கள் மருண்டு பார்க்கின்றன.

வலவ! இப்படிப்பட்ட நிலத்தில் தேரை விரைந்து செலுத்துக.

இவ்வாறெல்லாம் சொல்லிக்கொண்டு தலைவன் இன்றே வருவான், பொறுத்திரு என்கிறாய். மாலை வந்ததும் கோவலர் குழலோசை கேட்கிறதே! என்செய்வேன்? - தலைவி தோழியிடம் சொல்கிறாள்.