உகாய்க்குடி கிழார்

தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
எட்டுத்தொகை பத்துப்பாட்டு
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

உகாய்க்குடி கிழார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். உகாய்க்குடி எனும் ஊரினர் என்று இவர் பெயரின் மூலம் ‌அறியமுடிகிறது. இவர் பாடிய பாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் 63ஆவதாக உள்ளது.

ஊர்ப்பெயர் விளக்கம்தொகு

உகாய் என்பது ஒரு செடி. இக்காலத்தில் அதனை அம்மாம் பச்சரிசிச் செடி என்பர். அச் செடி மிகுதியாக இருந்த ஊர் உகாய்க்குடி.

குறுந்தொகை 63 - பாடல் தரும் செய்திதொகு

இது பாலைத்திணைப் பாடல். பொருள் தேடிவரச் செல்ல நினைத்த ஒருவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான். அதாவது அவனது மற்றொரு நெஞ்சு அவனது காதலியை நினைக்கிறது.

ஒரு நெஞ்சு சொல்கிறது; பொருள் இல்லாதவர்களுக்கு ஈதலும், துய்த்தலும் இல்லை. எனவே பொருள் செய்.

மற்றொரு நெஞ்சு சொல்கிறது; செய்யும் பொருளால் அம்மா அரிவையை வாங்கமுடியுமா?

எந்த நினைவு என்னை உய்விக்கும்?

அம்மா அரிவை = அழகிய மாமைநிறம் கொண்ட அரிவை
மாமைநிறம் = மாந்தளிர் நிறம்.

பாடல் மூலம்தொகு

ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனச்
செந்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே!

"https://ta.wikipedia.org/w/index.php?title=உகாய்க்குடி_கிழார்&oldid=2717920" இருந்து மீள்விக்கப்பட்டது