கோதமனார்

சங்க காலப் புலவர்
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

கோதமனார்(Kodhamanar) சங்க காலப் புலவர் ஆவார். இவர் சங்க இலக்கியத்தில் இரண்டு பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று, திருவள்ளுவமாலையில் 15ஆம் பாடலாகும்.[1]

சங்க இலக்கியத்தில் பங்களிப்பு தொகு

இவர் சங்க இலக்கிய நூலான புறநானூற்றில் 366ஆம் பாடலையும் திருவள்ளுவமாலையில் 15ஆம் பாடலையும் இயற்றியுள்ளார்.[2]

வள்ளுவர் மற்றும் குறள் குறித்த பார்வை தொகு

வள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்த கோதமனாரின் கருத்து:[3]

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் – ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று.[4]

புறநானூற்றுப் பாடல் தொகு

கோதமனார் எழுதிய புறநானூற்றுப் பாடல் கீழே தரப்பட்டுள்ளது.

விழுக் கடிப்பு அறைந்த முழுக் குரல் முரசம்
ஒழுக்குடை மருங்கின் ஒரு மொழித்து ஆக,
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப,
ஒரு தாம் ஆகிய பெருமையோரும்,

தம் புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே;
அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால்!
நின்ஒன்று உரைப்பக் கேண்மதி:
நின் ஊற்றம் பிறர் அறியாது,
பிறர் கூறிய மொழி தெரியா,

ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி,
இரவின் எல்லை வருவது நாடி,
உரைத்திசின் பெரும நன்றும்
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்றாங்கு,
செங் கண் மகளிரொடு சிறு துனி அளைஇ,

அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப,
கெடல் அருந் திருவ!
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது,
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி,
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப,

நீர் நிலை பெருத்த வார் மணல் அடை கரை,
காவுதொறும்
மடங்கல் உண்மை மாயமோ அன்றே.[6][7]

உரை தொகு

 

இடியோசை கேட்டு நடுங்கும் நாகம் போல, முரசின் முழக்கமானது என்னுடைய வேந்தன் வீரன், அவனை வெல்பவர்கள் யாரும் இல்லை என்ற ஒரே செய்தியை பகைவர்களின் காதில் சொல்லும். இப்படி வீரமும், புகழும் பெற்று ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த பேரரசர்கள் அனைவரும் ஒரு நாள் இறந்துதான் போவார்கள். ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற புகழ் நிலைத்து இருக்கும். இதுவே உலகத்து இயற்கை ஆகும். அறநெறி அறிந்த மன்னன் மகனே! வீரர்கள் போற்றும் வெற்றி வேந்தனே! உன்னுடைய வலிமையினை பிறர் அறியாத வண்ணம் காத்துக் கொள். பிறர் சொல்லும் செய்தியில் உள்ள உண்மையினை உணர்ந்து கொள். பகல் பொழுதில் உழைப்பவர்களுக்கு உறுதுணையாக இரு. பகல் பொழுதில் வயலில் உழுத எருது (நெல்லை உழவனுக்கு அளித்து) மாலையில் வைக்கோலைத் தின்னும். அதனைப் போன்று உனது உணவினை வேண்டுவோர்க்கெல்லாம் கொடுத்து மகிழ்வு கொள். பலியிடுவதற்கு நிறுத்தப்பட்டு இருக்கும் ஆடுகளுக்கு சாதல் நிச்சயம். அதனைப் போன்று மனிதர்களுக்கும் சாதல் உண்டு என்பது உண்மை. இது பொய்யன்று.[8]

மேற்கோள்கள் தொகு

  1. Vedanayagam, Rama (2017) (in Tamil). திருவள்ளுவ மாலை மூலமும் எளிய உரை விளக்கமும் [Tiruvalluva Maalai: Moolamum Eliya Urai Vilakkamum] (1 ). Chennai: Manimekalai Prasuram. பக். 27–28. 
  2. Kowmareeshwari (Ed.), S. (August 2012) (in Tamil). அகநானூறு, புறநானூறு [Agananuru, Purananuru]. Sanga Ilakkiyam. 3 (1 ). Chennai: Saradha Pathippagam. பக். 407. 
  3. Robinson, 2001, ப. 23.
  4. "திருவள்ளுவமாலை". 2021-03-08. பார்க்கப்பட்ட நாள் 2021-06-17.
  5. கோதமனார் (2020-06-03). "Kodhamanar". திருக்குறள் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-17.
  6. புறநானூறு (மூலமும் - உரையும், உரையாசிரியர்: ஞா. மாணிக்கவாசகர்
  7. "கோதமனார்". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
  8. புறநானூறு (மூலமும் - உரையும், உரையாசிரியர்: ஞா. மாணிக்கவாசகர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோதமனார்&oldid=3599751" இலிருந்து மீள்விக்கப்பட்டது