குறுங்கீரனார்

குறங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடலாக ஒன்றே ஒன்று சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளது. அது குறுந்தொகையில் 382-ம் பாடலாக அமைந்துள்ளது.

குறுந்தொகை 382 பாடல் தரும் செய்தி தொகு

வருவேன் என்று தலைவன் சொல்லிச் சென்ற கார்காலம் வந்துவிட்டது. முல்லைப் பூவும், தளவம் பூவும் பூத்து மணம் பரப்புகின்றன. பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவன் திரும்பவில்லை. அதை எண்ணித் தலைவிக்குக் கவலையாக உள்ளது. அவளது கவலையைப் போக்கத் தோழி அதனை 'வம்புப் பெய்யும் மாரி' என்று சொல்லித் தலைவியை ஏமாற்ற முயல்கிறாள். இது மாரிக் காலமாயின் அவர் வந்திருப்பாரே என்றும் கூறுகிறாள். இப்படிச் சொன்னால் தலைவி சற்று ஆறுதல் கொள்வாள் என்பது தோழியின் நம்பிக்கை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுங்கீரனார்&oldid=2718002" இலிருந்து மீள்விக்கப்பட்டது