காஷ்மீரின் ஹர்ஷன்

காஷ்மீரின் மன்னன்

ஹர்ஷர் (Harsha) ஹர்ஷதேவன், (ஆட்சி 1089-1101 பொ.ச.) எனவும் அறியப்படும் இவர், இந்தியாவின் காஷ்மீரில் ஆட்சி செய்த ஓர் இந்து மன்னர். இவர் முதல் இலோகாரா வம்சத்தைச் சேர்ந்தவர். அந்த வம்சத்தின் இவர் கடைசி ஆட்சியாளராக இருந்தார். இராஜதரங்கிணியை எழுதிய கல்கணரின் கூற்றுப்படி, இவர் ஒரு கடவுளைப் போல மிகவும் அழகாக இருந்தார். காஷ்மீரின் மன்னன் கலசாவின் மகனான இவரது நடத்தை சமீபத்தில் விவாதத்திற்குரியது.[2] இவர் திறமையானவராகவும், உன்னதமான அரசனாகவும் தனது ஆட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது செலவு பழக்கத்தால் நிதி சிக்கலில் சிக்கினார். இவர் பண்டிட் பிருத்வி நாத் கவுல் பம்சாய், தனது எ ஹிஸ்டரி ஆஃப் காஷ்மீர், (பக். 143) என்ற நூலில் இவரது ஆட்சியில் மண்ணுக்கு கூட வரி விதிக்கப்பட்டதாக கல்கணர் குறிப்பிட்டுள்ளதாக எழுதியுள்ளார். இவரது படைகள் செய்த ஆடம்பரமான செலவும் அர்த்தமற்ற மகிழ்ச்சிக்கான கொண்டாட்டமும் இவரை கடுமையான நிதி சிக்கல்களில் சிக்க வைத்தது. இவர் தற்செயலாக பீமசாகி கோவிலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொக்கிசங்களை கண்டுபிடித்தது, மற்ற கோவிலகளையும் கொள்ளையடிக்க இவரை தூண்டியது. மேலும் இவர் கடவுளர்களின் தங்கம் மற்றும் வெள்ளி உருவங்களையும் உருக்கத் தொடங்கினார்.

ஹர்ஷன்
ஹர்ஷனின் நாணயங்கள் (1089-1101 CE).[1]
காஷ்மீரின் மன்னன்
ஆட்சிக்காலம்1089-1101 பொ.ச.
முன்னையவர்மகாராஜா அஜித்தேவன்
பின்னையவர்நான்காம் குசலாதித்தியன்
பிறப்பு1059 பொ.ச.
காஷ்மீர்
இறப்பு1101 பொ.ச.
காஷ்மீர்
துணைவர்குசல் ராணி
வர்த்தகர் ராணி
குழந்தைகளின்
பெயர்கள்
அதிசேவன்
மகாராணி அஜிராணி
மரபுஇலோகரா வம்சம்
தந்தைமகாராஜ கலசா
தாய்ஈசந்த் மகாராணி
மதம்இந்து

சமகால உரையிலிருந்து: இராஜதரங்கிணி

தொகு

கல்கணரின் இராஜதரங்கிணி, இவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விவரத்தைத் தருகிறது. கல்கணரின் தந்தை சம்பகா ஹர்ஷரிடம் அமைச்சராக இருந்தார். கல்கணர் ஜெயசிம்மன் காலத்தில் (பொ.ச.1127-59) எழுதினார்.

இவர் இந்து மற்றும் புத்த கோவில்களை அழித்தார். மேலும் கடவுள்களை அழிப்பவர் " தேவத்பாதன-நாயக" அலுவலகத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர். கல்கணரின் காலத்தில், காஷ்மீரில் பௌத்தம் செழித்தோங்கி இருந்தது. மேலும் அது "இந்து மதத்திலிருந்து" வேறுபட்ட மதமாக கருதப்படவில்லை. இவர் பிராமண சிலைகளைப் போலவே பௌத்தர்களின் சிலைகளையும் குறிப்பிடுகிறார். கல்கணர் பௌத்தத்துடன் மிகவும் பரிச்சயமானவர். மேலும் பௌத்த கருத்துக்களை துல்லியமாக குறிப்பிடுகிறார். காஷ்மீரில் பௌத்தம் நீண்ட காலம் நிலைத்திருந்ததாகத் தோன்றுகிறது. பாரமுல்லாவில் ஒரு புத்த துறவி 14 ஆம் நூற்றாண்டு வரை இருந்ததாகக் கூறப்படுகிறது. அயினி அக்பரியின் ஆசிரியர் அபுல்-பசல், காஷ்மீரில் பௌத்தர்களைக் கண்டறிந்துள்ளார்.

இதனையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Joe Cribb (2011). "Coins of the Kashmir King Harshadeva (AD 1089–1101) in the light of the Gujranwalal hoard" (in en). Journal of the Oriental Numismatic Society 208: 28–33, Fig. 1–9. http://orientalnumismaticsociety.org/JONS/New/ONS_208. பார்த்த நாள்: 2022-02-22. 
  2. Bilhana, Prabhakar Narayan Kawthekar Sahitya Akademi, 1995 p.2

குறிப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஷ்மீரின்_ஹர்ஷன்&oldid=3537212" இலிருந்து மீள்விக்கப்பட்டது