சாரதா பீடம்

சாரதா பீடம் (Sharada Peeth), இந்தியபாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் ஆற்றின் கரையில், இந்து சமயக் கடவுளான சாரதாவிற்கு அர்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். [1] சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காஷ்மீர பண்டிதர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியில் இந்து சமய வேதங்கள் பயிற்றுவிக்கப்படும் மையமாக விளங்கியது.

சாரதா பீடம்
சாரதா பீடத்தின் சிதிலங்கள்
சாரதா பீடம் is located in பாக்கித்தான்
சாரதா பீடம்
சாரதா பீடம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாரதா பீடத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்:34°47′35″N 74°11′19″E / 34.79306°N 74.18861°E / 34.79306; 74.18861ஆள்கூறுகள்: 34°47′35″N 74°11′19″E / 34.79306°N 74.18861°E / 34.79306; 74.18861
பெயர்
தேவநாகரி:शारदा पीठम्
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு:Śāradā pīṭham
அமைவிடம்
அமைவு:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
கோயில் தகவல்கள்
மூலவர்:சாரதா (சரசுவதி)

14ஆம் நூற்றாண்டில் சிதிலமடைந்த சாரதா பீடத்தை காஷ்மீர் மன்னர் குலாப் சிங் 19ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்தார்[2][3][4]இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் சாராதா பீடம் அமைந்த பகுதியை பாகிஸ்தான் நாட்டு பஷ்தூன் பழங்குடி மக்கள் கைப்பற்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணைத்தனர்.

அமைவிடம்தொகு

 
சிதிலமடைந்த சாரதா பீட (சர்வயக்ஞ பீடம்) கோயில் கருவறை, ஆசாத் காஷ்மீர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், பாரமுல்லாவிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், முசாபராபாத் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், எல்லைக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

வேத கல்வி மையம்தொகு

இந்தியத் துணைக்கண்டத்தில் சாரதா பீடம், புகழ் பெற்ற வேத கல்வி மையமாக விளங்கியது.[5]அத்வைத தத்துவ நிறுவனர் ஆதிசங்கரர் மற்றும் விசிட்டாத்துவைத நிறுவனரும் வைணவ குருவுமான இராமானுசர், பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுதுவதற்காக காஷ்மீரின் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்தனர்.

யுவான் சுவாங்தொகு

கி பி 632இல் சீன பௌத்தப் பயணி யுவான் சுவாங் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்து, இரண்டு ஆண்டுகள் தங்கி, பௌத்தம் தொடர்பான கல்வியைப் பயின்றார்.[6]

சாரதா கோயில் அமைப்புதொகு

சாரதா பீடத்தின் சரசுவதி கோயிலின் நீளம் 142 அடியாகவும், அகலம் 94.6 அடியாகவுவும் இருந்தது. மேலும் 88 அடி உயர தோரண வாயிலும் அமைந்திருந்தது. கோயில் மூலவரான சாரதா தேவியின் உருவம் சந்தன மரத்தினால் செய்யப்பட்டது.

வரலாற்று குறிப்புகள்தொகு

காஷ்மீரப் பண்டிதரான மகாகவி கல்கணர், தான் எழுதிய இராஜதரங்கிணி எனும் சமசுகிருத நூலில் சாரதா பீடத்தையும், அதன் நிலவியலையும் குறித்துள்ளார்.

இசுலாமிய வரலாற்று அறிஞரும், புவியியலாளருமான அல்-பிருனி (973 - 1048), சாரதா பீடத்தின் கருவறையில் மரத்திலான சரசுவதியின் சிற்பம் காணப்பட்டதாக தமது குறிப்பில் குறித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரத்தின் சூரியன் கோயில் போன்று, சாரதா பீடத்தின் கோயில் அமைப்பு இருந்ததாக குறிப்பிடுகிறார்.

பதினான்காம் நூற்றாண்டில் சாரதா பீடத்தின் கோயிலை இசுலாமியர்கள் சிதைத்ததாக கருதப்படுகிறது.

படக்காட்சிகள்தொகு


அடிக்குறிப்புகள்தொகு

  1. "Pandits denied entry into temple in Pakistan Occupied Kashmir". The Hindu. 3 October 2007. http://www.hindu.com/thehindu/holnus/002200710030341.htm. பார்த்த நாள்: 2014-02-12. 
  2. [1] Archived ஆகத்து 11, 2013 at the Wayback Machine.
  3. "Sharda Temple Photo Gallery by Gharib Hanif at". Pbase.com. பார்த்த நாள் 2014-02-12.
  4. "National : Kashmiri Pandits want to visit Sharda Peeth in Pakistan Occupied Kashmir". The Hindu. 2005-02-27. http://www.hindu.com/2005/02/27/stories/2005022701231200.htm. பார்த்த நாள்: 2014-02-12. 
  5. "Pandits to visit Sharda temple". The Hindu. 17 May 2006. http://www.hindu.com/2006/05/17/stories/2006051704920900.htm. பார்த்த நாள்: 13 August 2012. 
  6. Chitkara (2002), p. 273.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரதா_பீடம்&oldid=3047951" இருந்து மீள்விக்கப்பட்டது