காசியப் காஸ் படேல் (பிறப்பு:25 பிப்ரவரி 1980)[1]இந்திய வம்சாவளி அமெரிக்கரான காசியப் காஸ் படேல், அமெரிக்கா நாட்டின் குடியரசுக் கட்சியின் அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். இவரை FBI அமைப்பின் இயக்குநராக டோனால்ட் டிரம்ப்பால் பரிந்துரைத்துள்ளார்.[2]

காஸ் படேல்
2020ல் காஸ் படேல்
இயக்குநர், FBI (நியமிக்கப்படவுள்ளவர்)
பதவியில்
TBD
குடியரசுத் தலைவர்டோனால்ட் டிரம்ப் (அதிபராக தேர்வு செய்யப்பட்டவர்)
Succeedingகிறிஸ்டோபர் ஏ. ராய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
காசியப் பிரமோத் வினோத் படேல்

பெப்ரவரி 25, 1980 (1980-02-25) (அகவை 44)
கார்டன் நகரம், நியூயார்க், அமெரிக்கா
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
கல்விரிச்மாண்ட் பல்கலைக்கழகம்
நியூயார்க் சட்டக் கல்லூரி
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (சர்வதேச சட்டம்)
பணிஅரசு முகவர், அரசு வழக்கறிஞர், எழுத்தாளர்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
டிரம்ப் ஊடகம் மற்றும் தொழில்நுட்பக் குழுமம்

முன்னதாக காஸ் படேல் டோனால்ட் டிரம்ப்பின் முதல் ஆட்சியின் போது, அமெரிக்க தேசியப் பாதுகாப்புக் குழுவின் அதிகாரியாகவும், தேசியப் புலனாய்வு அமைப்பின் இயக்குநரின் ஆலோசகராகவும் மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைச்சரின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியவர்.[3][4][5]

இளமை & கல்வி

தொகு

1970களில் அமெரிக்காவில் குடியேறிய ஒரு குஜராத்திக் குடும்பத்தில் 1980ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தில் பிறந்த காஸ் படேலின் தந்தை அமெரிக்க விமான நிறுவனத்தில் பணியாற்றியவர். படேல் ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். நியூயார்க்கில் சட்டம் பயின்றார். பின் இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் சர்வதேச சட்டத்தில் பட்டம் பெற்றார்.

தொழில்

தொகு

காஷ் படேல் அமெரிக்க அதிபரின் துணை உதவியாளராகவும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பயங்கரவாத எதிர்ப்பு துறையின் மூத்த இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டோபர் மில்லரின் தலைமை அதிகாரியாக காஷ் படேல் பணியாற்றியுள்ளார். அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநரின் முதன்மை துணை அதிகாரியாகவும் காஷ் படேல் இருந்துள்ளார். தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் சேருவதற்கு முன்பு, புலனாய்வுக்கான நிரந்தர தேர்வுக் குழுவின் மூத்த ஆலோசகராக காஷ் படேல் பணியாற்றினார். மேலும் காஸ் படேல் உளவுத்துறை அமைப்பு மற்றும் அமெரிக்க சிறப்பு நடவடிக்கை படைகளுக்கான முக்கியமான திட்டங்களையும் மேற்பார்வையிட்டுள்ளார். புலனாய்வுக்கான நிரந்தர தேர்வுக் குழுவில் பணியாற்றுவதற்கு முன்பு, காஷ் படேல் அமெரிக்க நீதித்துறையில் பயங்கரவாதம் குறித்த வழக்குகளைக் கையாளும் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். 44 வயதான காஷ் படேல், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனால்ட் டிரம்ப்பின் மிகவும் விசுவாசமான நபர்களுள் ஒருவர். காஷ் படேலை எஃப்பிஐ-யின் இயக்குநராக நியமிக்க டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஸ்_படேல்&oldid=4153484" இலிருந்து மீள்விக்கப்பட்டது