கா. செல்லப்பன்
கா. செல்லப்பன் (K. Chellappan, 1936 – 9 செப்டெம்பர் 2024) என்பவர் இரவீந்திரநாத் தாகூர் எழுதிய கோரா புதினத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்ததற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர் ஆவார்.[1] இவருக்கு இவ்விருது 18 செப்டம்பர் 2021 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.[2][3]
இளமை
தொகுதமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் காசி விசுவநாதன் சௌந்தரம்மாள் தம்பதியருக்கு 1936-ஆம் ஆண்டில் மகனாகப் பிறந்த செல்லப்பன், ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் பழம்புதுமை புதுப்பழமை, திருக்குறள் முதல் கிரிக்கெட் வரை, விடுதலைச் சிட்டும் புரட்சிக்குயிலும், ஒப்பியல் தமிழ், ஒப்பிலக்கிய கொள்கைகளும் செயல்முறைகளும் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.[4][5] உடல்நலக்குறைவால் 2024 செப்டம்பர் 9 அன்று இயற்கை எய்தினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கா. செல்லப்பனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது". தினமணி. https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2021/Sep/18/sahitya-akademi-award-for-translation-to-k-sellappan-3701770.html. பார்த்த நாள்: 9 September 2024.
- ↑ Sahitya Akademi Prize for Translation for 2020
- ↑ Tamil writers get Sahitya Akademi prize for translation
- ↑ Dr. K. Chellappan Books
- ↑ [1]