கிங்கிரி தேவி

கிங்கிரி தேவி (Kinkri Devi) (1925 - 30 திசம்பர் 2007) ஓர் இந்திய ஆர்வலரும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். சட்டவிரோத சுரங்கங்கள் மற்றும் குவாரிக்கு எதிராக தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் போரை நடத்துவதில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு படிக்கவோ எழுதவோ தெரியாது. இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் தனது பெயரை எப்படி எழுத வேண்டும் என்று கற்றுக்கொண்டார்.[1]

இவர் வறுமையால் மிகவும் பாதிக்கப்பட்டார். இது அமெரிக்காவை தளமாகக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தின் தொண்டு நிறுவனத்தால் பிற்கால வாழ்க்கையில் இவரது வாழ்க்கை நிலைமைகள் குறித்த பஞ்சாபி செய்தித்தாள் வெளியிட்ட பிறகு நீங்கியது.[2]

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

தேவி 1925 இல் இமாச்சல பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் கட்டோன் என்ற கிராமத்தில் பிறந்தார்.[1][2] இவரது தந்தை தலித் சமூகத்தைச் சேர்ந்த விவசாயி ஆவார்.[1] இவர் தனது குழந்தை பருவத்திலேயே ஒரு ஊழியராக வேலை செய்யத் தொடங்கினார். 14 வயதில் பிணைக்கப்பட்ட தொழிலாளியான சாமு இராம் என்பவரை மணந்தார்.[1] இராம் 22 வயதில் டைபாய்டு காய்ச்சலால் இறந்து போனார்.[1]

துப்புரவாளராக பணிபுரிந்தபோது, இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் கல் குவாரி நடப்பதையும், நீர்வழங்கலுக்கு தீங்கு விளைவிப்பதையும், நெல் வயல்களை அழிப்பதையும் இவர் கவனித்தார்.[1] இந்த கட்டத்தில் தேவி இந்தப் பிரச்சனையை கையில் எடுக்க முடிவு செய்தார்.[1]

செயல்பாடுகள்

தொகு

48 சுரங்க உரிமையாளர்களுக்கு எதிராக சிம்லா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்ததால், உள்ளூர் தன்னார்வக் குழுவான மக்கள் தேவைக்கான மக்கள் நடவடிக்கைக் குழு இவருக்கு ஆதரவளித்தது.[1] அவர்கள் சுண்ணாம்பு சுரங்கத்தில் குவாரிகள் பொறுப்பற்றதாக இருப்பதாக இவர் குற்றம் சாட்டினார். ஆனால் அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தனர். மேலும், இவர் வெறுமனே அவர்களை அச்சுறுத்துவதாகக் கூறினர்.[1]

இவரது வழக்குக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே நீதிமன்றத்திற்கு வெளியே 19 நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.[1] இந்த பிரச்சினையை நீதிமன்றம் எடுக்க முடிவு செய்தபோது, தேவி ஒரு தேசிய பிரபலமாகிவிட்டார்.[1] நீதிமன்றம் 1987 ஆம் ஆண்டில் சுரங்கத்தை நிறுத்த உத்தரவிட்டது. மலைகளில் வெடி வைப்பதற்கு தடையையும் விதித்தது.[1] சூலை 1995 இல் நிராகரிக்கப்பட்ட சுரங்க உரிமையாளர்கள் இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.[1]

அப்போதைய அமெரிக்காவின் முதல் பெண்மணி ஹிலாரி கிளிண்டன் இவரது பணிகளால் ஆர்வம் காட்டினார். அதே ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள தேவி அழைக்கப்பட்டார்.[1] விழாத் தொடக்கத்தில் குத்து விளக்கை ஏற்றி வைத்து தனது போராட்டம் குறித்தும், சாதாரண மக்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் பேசினார்.[1]

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளாலும், மலைகள் மற்றும் வனப் பாதுகாப்புச் சட்டங்களாலும் சட்டவிரோத சுரங்கங்கள் குறைந்துவிட்டன.[3]

இறப்பு

தொகு

தேவி 2007 திசம்பர் 30 அன்று இந்தியாவின் சண்டிகரில் தனது 82 வயதில் இறந்தார். <[1] இவருக்கு ஒரு மகனும் 12 பேரக்குழந்தைகளும் இருக்கின்றனர்.[1]

விருதுகள்

தொகு
  • 1999 இல், தேவிக்கு ஸ்திரீ சக்தி கௌரவம் வழங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 Pandya, Haresh (2008-01-06). "Kinkri Devi, 82, battled illegal mining in India". International Herald Tribune. http://www.iht.com/articles/2008/01/06/asia/obits.php. 
  2. 2.0 2.1 2.2 "Kinkri Devi: Impoverished Dalit woman who became an unlikely celebrity after campaigning against mining in her home region". தி டைம்ஸ். 2008-01-03. http://www.timesonline.co.uk/tol/comment/obituaries/article3122886.ece. 
  3. "She Was Not Literate. Yet the Brave Kinkri Devi Educated the World about the Environment". பார்க்கப்பட்ட நாள் 7 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிங்கிரி_தேவி&oldid=3744940" இலிருந்து மீள்விக்கப்பட்டது