கிங்லோ ஆறு
கிங்லோ ஆறு (Hinglo River)(ஹிங்லோ என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது இந்திய மாநிலங்களான சார்கண்ட்டு மற்றும் மேற்கு வங்கத்தில் பாயும் அஜய் ஆற்றின் கிளை ஆறாகும்.
கிங்லோ ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சார்க்கண்டு, மேற்கு வங்காளம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | சாந்தால் பார்கானாசு, ஜம்தாரா அருகில் மலை |
⁃ ஆள்கூறுகள் | 23°54′N 87°6′E / 23.900°N 87.100°E |
வடிநில அளவு | 2,009 km2 (776 sq mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | அஜய் ஆறு |
ஆற்றோட்டம்
தொகுகிங்லோ சந்தால் பர்கானாசில் தொடங்கி, அஜய் ஆற்றுக்கு இணையாகச் சிறிது தூரம் ஓடி, பீம்கருக்குப் பிறகு சிறிது தூரம் ஓடுகிறது. பிர்பூம் மாவட்டத்தின் பலஷ்டாங்கா கிராமத்திற்கு அருகில் 2,009 எக்டேர்கள் (4,960 ஏக்கர்கள்) நீர்பிடிப்பு பகுதியைக் கொண்டுள்ளது.[1]
நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளம்
தொகுகிங்லோவின் குறுக்கே அஜய் மற்றும் கோப்பாய்க்கு இடைப்பட்ட பகுதிகளில் கட்டப்பட்ட அணைமூலம் நீர்ப்பாசனம் வழங்கப்படுகிறது. ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த அணையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.[2]
கிங்லோ அணையின் கொள்ளளவு 17,102,000 கன சதுர மீட்டர்கள் (13,865 acre⋅ft) [3] ஆனால், கால்வாய் பாசனத்துக்கான நீர் ஆதாரங்களை முறையாக நிர்வாகம் செய்யாததால், ஆற்றின் படுகை உயர்ந்து, கால்வாய்கள் தூர்ந்து வருகிறது. மேலும், அணையில் வண்டல் மண் படிந்துள்ளது. பருவமழைக் காலத்தின் கடைசிக் கட்டத்தில் அதிக மழை பெய்தால் அணையில் நீரைத் தேக்கிவைக்க இயலாமல், அதிக அளவு நீர் திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீர் ஆற்றின் கரை மற்றும் கால்வாய்களில் நிரம்பி வழிகிறது. பக்கவாட்டு தடுப்புகள் எல்லா இடங்களிலும் சரியாகக் கட்டப்படவில்லை. மேலும் பலவீனமான இடங்களில் கரைகள் உடைந்து வெள்ளத்தை ஏற்படுத்துகின்றன. வெள்ள நீர் வெளியேறும் பாதையும் ஒழுங்காக இல்லாததால் நீர் ஆங்காங்கே தேங்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Department of Agriculture, Soil Conservation Section". Birbhum District. பார்க்கப்பட்ட நாள் 2009-03-25.
- ↑ "Dams, officials to blame more for Bengal floods than rains". Archived from the original on 2008-11-20. பார்க்கப்பட்ட நாள் 2009-03-25.
- ↑ "Poverty and Vulnerability" (PDF). Vulnerability due to flood. Human Development Report: Birbhum. Archived from the original (PDF) on 7 August 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-06-15.