கிசாவ் அணை
கிசாவ் அணை (Kishau Dam) இந்திய மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு இடையேயான எல்லையைக் கடக்கும் தன் ஆற்றின் மீது அமைக்கப்பட்டு வரும் ஒரு புவியீர்ப்பு அணையாகும் . திட்ட தளம் தக்பதாருக்கு வடக்கு மற்றும் இச்சாரி அணையின் மேல்புறமாக சுமார் 39 கிலோமீட்டர்கள் ஆகும் . அணையின் முதன்மை நோக்கம் மின் உற்பத்தி மற்றும் கீழ்நிலை நீர் வழங்கல் போன்றவையாகும். அணை 660 மெகாவாட் மின் நிலையத்தை ஆதரிக்கும் மற்றும் 97,076 எக்டேர்கள் (239,880 ஏக்கர்கள்) பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யும்.
கிசாவ் அணை Kishau Dam | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவிடம் | இமாச்சலப் பிரதேசம்/உத்தராகண்டம் |
புவியியல் ஆள்கூற்று | 30°44′59.30″N 77°42′15.96″E / 30.7498056°N 77.7044333°E |
நோக்கம் | மின் சக்தி, பாசனம் |
நிலை | முன்மொழியப்பட்டது |
திறந்தது | 2023 |
அணையும் வழிகாலும் | |
வகை | ஈர்ப்பு வகை |
தடுக்கப்படும் ஆறு | தன் ஆறு |
உயரம் | 236 m (774 அடி) |
பணியமர்த்தம் | 2023 (நிறுவப்பட்டது.) |
வகை | பாரம்பரியமானது |
ஹைட்ராலிக் ஹெட் | 186 m (610 அடி) |
சுழலிகள் | 4 x 165 மெகாவாட்டு பிராசின்சு வகை |
நிறுவப்பட்ட திறன் | 660 MW |
இரு மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு தொடர்பாக பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அணை தற்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது. கட்டுமானம் முதலில் 2015 இல் தொடங்கும் [1] என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான ஒப்புதல் 2018 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. [2] 2023 ஆம் ஆண்டிற்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. [3]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Work on Kishau power project may resume soon". Times of India. 11 February 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
- ↑ "Haryana govt gives nod for construction of Kishau dam". Press Trust of India. Business Standard. Sep 19, 2018. https://www.business-standard.com/article/pti-stories/haryana-govt-gives-nod-for-construction-of-kishau-dam-118091901088_1.html.
- ↑ "Kishau Multi Purpose Project". UJVNL. Archived from the original on 22 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.