கிஜூபாய் பதேக்கா

இந்திய கல்வியாளர்

கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.

கிரிஜாசங்கர் பக்வான்ஜி பதேக்கா
பிறப்பு15 நவம்பர் 1885
சித்தல், சௌராட்டிரதேசம், இந்தியா
இறப்பு23 சூன் 1939(1939-06-23) (அகவை 53)
பவநகர், குசராத்து, இந்தியா
அறியப்படுவதுகல்வி, சீர்திருத்தம், சிறுவர் கல்வி

வாழ்க்கைதொகு

பதேகா மேற்கு இந்தாயாவின் செளராஷ்டிரா பகுதியில் பிறந்தவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் “ கிரிஜாசங்கர் “. குஜராத்தில் உள்ள பவநகர் பகுதியில் வளர்ந்தார். 1907 –ல் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு சென்ற இவர், பின் மும்பையில் தனது பணியை தொடர்ந்தார். 1939, ஜூன் 23-ல் இயற்கை எய்தினார்.

கல்விக்கான பங்களிப்புகள்தொகு

1920 –ல் பால மந்திர் மழலையர் பள்ளியை தொடங்கினார். பிறகு நானாபாய்பட், ஹர்பால் திரிவேதி மற்றும் பதேகா ஆகியோர் சேர்ந்து “ ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஜிஜூபாய் வினய் மந்திர் “ என்னும் பள்ளியை பவநகரில் நிறுவினர்.

வெளியீடுகள்தொகு

பதேகா கதைப்புத்தகங்கள் உட்பட 200 நூல்களை வெளியிட்டுள்ளார். அவை அனைத்தும் குழந்தைக் கல்வி, பயணம், நகைச்சுவை இவைகளை மையப்படுத்தியே இருந்தன. அவருடைய புத்தகங்கள் குழந்தைகள், பெற்றோர், கல்வியாளர்களை பெரிதும் கவர்ந்தன.

மேற்கோள்கள்தொகு

  1. Goli (30 May 2010). "Gijubhai Badheka: An inspiring teacher though Montessori" (Web page). NGOpost.org. NGOpost.org. மூல முகவரியிலிருந்து 11 ஏப்ரல் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 March 2012.
  2. Mamata Pandya. "Gijubhai on Education" (Web page). Learning Network Initiative. The Learning Network. மூல முகவரியிலிருந்து 27 செப்டம்பர் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஜூபாய்_பதேக்கா&oldid=3239901" இருந்து மீள்விக்கப்பட்டது