கிஞ்சராபு அச்சன் நாயுடு
கிஞ்சரபு அச்சன்நாயுடு (Kinjarapu Atchannaidu) ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2014 மற்றும் 2019ல் நடந்த தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தெக்கலி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [1] [2] இவர் அக்டோபர் 2020 முதல் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவராக உள்ளார் [3]
கிஞ்சராபு அச்சன் நாயுடு | |
---|---|
தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டாவது தலைவர் ஆந்திரப் பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 அக்டோபர் 2020 | |
முன்னையவர் | கிம்மிடி கலாவெங்கட்ட ராவ் |
போக்குவரத்து, பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் அதிகாரமளித்தல், கைத்தறி மற்றும் துணி அமைச்சர் ஆந்திரப் பிரதேச அரசு | |
பதவியில் 8 ஜூன் 2014 – 29 மே 2019 | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
சட்டமன்ற உறுப்பினர் Member அரிச்சந்திரபுரம் | |
பதவியில் 1996–2009 | |
முதலமைச்சர் | |
பின்னவர் | தொகுதி கலைக்கப்பட்டது |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
உறவுகள் |
|
அரசியல் வாழ்க்கை
தொகு1996 இடைத்தேர்தல், [4] 1999 [5] மற்றும் 2004 ஆகிய மூன்று தேர்தல்களில் அரிச்சந்திரபுரம் தொகுதியில் இருந்து அச்சன்நாயுடு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [6] அரிச்சந்திரபுரம் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2009 தேர்தலில் தெக்கலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் மரணம் காரணமாக நடந்த உடனடி இடைத்தேர்தலிலும் இவர் தோல்வியடைந்தார். [7] 2014 மற்றும் 2019 தேர்தல்களில் தெக்கலி தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]
இவர் ந. சந்திரபாபு நாயுடுவின் மூன்றாவதுஅமைச்சரவையின் போது போக்குவரத்து அமைச்சராக இருந்தார். [3]
சொந்த வாழ்க்கை
தொகுஇவர் கிஞ்சராபு எர்ரன் நாயுடுவின் சகோதரரும் ராம் மோகன் நாயுடு கிஞ்சரபுவின் மாமாவும் ஆவார். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Andhra Pradesh Assembly election result: Full list of winners". 24 May 2019.
- ↑ 2.0 2.1 "Atchannaidu confident of retaining Tekkali". 20 March 2019. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/atchannaidu-confident-of-retaining-tekkali/article26594071.ece.
- ↑ 3.0 3.1 3.2 "Kinjarapu Atchannaidu appointed as new chief of TDP in Andhra Pradesh". 19 October 2020.
- ↑ "Bye - Election, 1996". இந்தியத் தேர்தல் ஆணையம். 14 October 1996. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ "Election Commission of India.1999 results.Harishchandrapuram" (PDF). பார்க்கப்பட்ட நாள் 8 March 2007.
- ↑ "Andhra Pradesh Assembly Election Results in 2004". பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ "Congress retains Tekkali seat in bypolls". 15 September 2009. https://www.business-standard.com/article/economy-policy/congress-retains-tekkali-seat-in-bypolls-109091500043_1.html.