கிடாரி சர்வேசுவர ராவ்

இந்திய அரசியல்வாதி

கிடாரி சர்வேசுவர ராவ் (Kidari Sarveswara Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். முதலில் இவர் ஒய். எசு. ஆர். காங்கிரசு கட்சி கட்சியையும் பின்னர் தெலுங்கு தேச கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] அரக்கு பள்ளத்தாக்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2] 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று அரக்கு பள்ளத்தாக்கில் மாவோயிசுட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[3] கிடாரியின் மரணத்திற்குப் பிறகு, இவரது மகன் கிடாரி சிரவன் குமார் பொதுத் தேர்தலில் பங்கேற்காமல் மாநில பழங்குடியினர் நல அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

கிடாரி சர்வேசுவர ராவ்
Kidari Sarveswara Rao
இறப்பு(2018-09-23)23 செப்டம்பர் 2018
விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பிள்ளைகள்கிடாரி சிரவன் குமார் (மகன்)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடாரி_சர்வேசுவர_ராவ்&oldid=3820652" இலிருந்து மீள்விக்கப்பட்டது