கிடில்(Kiddle) என்பது குழந்தைகளுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கூகிலீண் ஒரு தேடல் எந்திரம் ஆகும்.

கிடில்
கிடில்
வலைத்தள வகைதேடல் பொறி
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
பதிவு செய்தல்No
வெளியீடு2014
அலெக்சா நிலைIncrease 15,589 (உலக அளவில், ஏப்ரல் 2020)
உரலிwww.kiddle.co

காரணம்

தொகு

பொதுவாக ஒரு தேடலின் போது அதற்கு சற்றும் தொடர்பில்லாத ஆபாச விளம்பரங்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எனவே இத்தகைய நிகழ்வுகளால் குழந்தைகள் அதிகம்பாதிக்கப்படுவதாக கருதப்பட்டு கூகிள் பாதுகாப்பான தேடல் ஒன்றினை நவம்பர் 11,2009ல் அறிமுகம் செய்தது[1].தற்போது முழுக்க குழந்தைகளுக்கான ஒரு தேடல் பொறியாக இது அமைக்கப்பட்டுள்ளது.[2]

பட தேடல்

தொகு
 
Imatge cercadors 1

படங்களைட் தேடுவதற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு தேடுபொறி ஆகும்.ஒரு படத்திற்கான திறவுச் சொற்களோ அல்லது அதற்கான இணையை இணைப்புகளைப் பொறுத்து இதன் தேடல் அமையும்.இதன் முடிவுகள் வடிவம்,மீதரவு போன்றவற்றின் அடிப்படையில் அமைகின்றன.

பட தேடலின் வகைகள்

மீதரவின் மூலம் தேடல்

தொகு

ஒரு படம் தொடர்பான வார்த்தைகள் தொடர்பாக தேடுதல்.

எடுத்துகாட்டுகள் மூலம் தேடல்

தொகு

இவை உள்ளடக்கம் சார்ந்த தேடல் எனவும் அழைக்கப்படுகிறது.தேடலின் வண்ணங்கள் மற்றும் வடிவங்களைப் பொறுத்து இது முடிவுளை தருகின்றது.[3]

பாதுகாப்பான தேடல்

தொகு

ஆபாசம் தொடர்பான எந்த வார்த்தைகளை இதில் தேடினாலும் அதற்கான முடிவுகள் இதில் காண்பிக்கப்படாது என்பது இதன் சிறப்பு ஆகும்.இதன் மூலம் குழந்தைகள் தங்களுக்குத் தேவையான முடிவுகளை மட்டுமே காண இயலும்.[2]

சான்றுகள்

தொகு
  1. Pete Lidwell (November 11, 2009). "Locking SafeSearch". Google Official Blog. பார்க்கப்பட்ட நாள் 3 February 2013.
  2. 2.0 2.1 http://www.vikatan.com/news/information-technology/93221-kids-search-engine-kiddle-does-not-show-adult-content.html
  3. Eakins, John; Graham,Margaret. "Content-based Image Retrieval". University of Northumbria at Newcastle. Archived from the original on 2012-02-05. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.

வெளி இணைப்புகள்

தொகு

https://www.cs.princeton.edu/~funk/tog03.pdf

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடில்&oldid=3549586" இலிருந்து மீள்விக்கப்பட்டது