கிட்டன் நூன்வால்

கிட்டன் நூன்வால், இந்தியாவின் அரியானா-டெல்லி எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் ஹரியான்வி பின்னணியைக் கொண்ட நிகழ்த்திறன் கலைஞரும், வடிவமைப்பு கல்வியாளரும், ஒப்பனை கலைஞரும் ஆடை வடிவமைப்பாளருமாவார். [1] [2] [3]

கிட்டன் நூன்வால்
பிறப்புடெல்லி
தேசியம்இந்தியர்
கல்விஉடையலங்கார தொழில்நுட்பத்தில் முதுநிலை
அறியப்படுவதுநடனக்கலைஞர், பெண்ணுடையாள கலைஞர், ஆடை வடிவமைப்பாளர்

கிட்டன், இவரது கிராமத்தின் உள்ளூர் ராம்லீலா ஒப்பனை விழாக்களில் ஆரம்பித்து தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் செல்லும் வரை திறமையான ஆடை வடிவமைப்பு மாணவராக தனது கலைத் திறமையை நிகழ்கலையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த திறமையையே, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தம் தனது சமூகப் போராட்டத்திற்கு ஆயுதமாகவும் பயன்படுத்தி வருகிறார்.


உலகம் முழுவதும் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள கிட்டன், வடிவமைப்பு மற்றும் பாலின உணர்திறன் பட்டறைகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளார். [4] கிழக்கத்திய இடுப்பாட்டத்தில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றுள்ள இவர், இடையை பல்வேறு வடிவில் அசைப்பதன் மூலம் நிகழ்கலையாக நிகழ்த்தி, உள்ளுணவுர்களை வெளிப்படுத்து வருகிறார். [5] [6] ஒரு சிறிய நகரத்தில் உள்ள ஒரு மரபுவழி குடும்பத்தில் இருந்து வந்தவர், [7] கிட்டன் தன்னை ஒரு திரவ நிலை பாலின அடையாளம் கொண்டவராக வெளிப்படுத்தியுள்ளார். இவரது இந்த அடையாளத்தையும் கலை வடிவங்களையும், தனது குடும்பத்தாருக்கு தெரியாமல் மறைத்து வழங்குவதில் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டு வந்துள்ளார். [8] [9]

கிட்டன் முன்னதாக ரிது குமாரிடம் ஆடை வடிவமைப்பாளராகவும், ரா மேங்கோ என்பதில் உதவி வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். [10] மேலும்அகமதாபாத்தில் தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் இருந்து ஆடை/பேஷன் டிசைனில் முதுகலைப் பட்டம் பெற்றனர் உடையலங்கார தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் ந.ந.ஈ.தி மற்றும் பால்புதுமை மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துபவர் கிட்டன். [11] மனிதனைத் தவிர வேறில்லை (நத்திங் பட் எ ஹ்யூமன்) என்ற ஆவணப்படம் நூன்வாலின் வாழ்க்கையை உள்ளடக்கி எடுக்கப்பட்டுள்ளது [12]

மேற்கோள்கள் தொகு

  1. ""Not ashamed to dress like a woman", says gender fluid artist Hiten Noonwal". InUth (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-06-27. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  2. "International Dance Day: Three men break stereotypes with ballet, belly and heels". The Indian Express (in ஆங்கிலம்). 2018-05-01. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  3. Ramadurai, Charukesi (2021-06-25). "'Drag is political': the pioneering Indian event uniting art and activism". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  4. Neha Chaudhary (Feb 14, 2019). "No special LGBTQI parties in Jaipur on first Valentine's Day post decriminalisation of sec 377, but everyone is welcome | Jaipur News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  5. Service, Tribune News. "Workshop at women's college". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  6. Apichatsakol, Mika (2020-05-07). "The #MetGalaChallenge Is Almost Better Than The Real Thing". Tatler Thailand (in ஆங்கிலம்). Archived from the original on 2021-07-20. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  7. "'Drag'ging issues: In search of freedom and self-expression". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  8. "Love in Times of Queer: For LGBTQ Desis, Dating Apps Also Mean Bigotry, Hate Crime". News18 (in ஆங்கிலம்). 2021-07-02. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  9. "Under-rated Drag Queens Breaking The Gender Stereotypes". WMH India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-06-08. Archived from the original on 2021-07-20. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  10. Godhawat, Jayati (2018-04-30). "Gender-Fluid Hiten Noonwal Narrates His Story Of Coping With Depression Through Bold Self-Portraits". Indian Women Blog - Stories of Indian Women (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  11. "LGBTQ+ Creators That Are Taking Over Beauty Instagram". grazia.co.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  12. BMO IFFSA Virtual 2021 | Nothing But a Human (in ஆங்கிலம்), archived from the original on 2021-07-20, பார்க்கப்பட்ட நாள் 2021-07-20
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்டன்_நூன்வால்&oldid=3696320" இலிருந்து மீள்விக்கப்பட்டது