கிட்டி ஓ'நீல்

அமெரிக்க சண்டை மற்றும் விசையுந்து பந்தயக் கலைஞர்

கிட்டி லின் ஓ'நீல் ( Kitty Linn O'Neil ) (மார்ச் 24, 1946 - நவம்பர் 2, 2018) அமெரிக்காவைச் சேர்ந்த் சண்டைக் கலைஞரும், மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனையும் ஆவார். இவருக்கு "உலகின் வேகமான பெண்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. சிறுவயதிலேயே ஒரு நோய் இவரை காது கேளாதவராக ஆக்கியது. மேலும் இளமைப் பருவத்தில் அதிகமான நோய்கள் போட்டிகளில் கலந்து கொள்வதைத் தடுத்தன. இவரது வாழ்க்கை ஒரு தொலைக்காட்சித் திரைப்படமாகவும், ஒரு அதிரடி நபராகவும் இவர் சித்தரிக்கப்பட்டார். பெண்களின் முழுமையான நில வேக சாதனை 2019 வரை இவர் சாதனையைக் கொண்டிருந்தார்.

கிட்டி ஓ'நீல்
1976 களில் ஓ'நீல்
பிறப்பு(1946-03-24)மார்ச்சு 24, 1946
கார்ப்பஸ் கிரிஸ்ட், டெக்சஸ், அமெரிகா.
இறப்புநவம்பர் 2, 2018(2018-11-02) (அகவை 72)
தெற்கு டகோட்டாவின் யுரேகா, அமெரிக்கா
பணிபெண் சண்டைக் கலைஞர், மோட்டார் சைக்கிள்/ கார் பந்தய வீராங்கனை.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கிட்டி லின் ஓ'நீல் மார்ச் 24, 1946 இல் டெக்சாஸில் உள்ள கார்பஸ் கிறிஸ்டியில் பிறந்தார்.[1] இவரது தந்தை, ஜான் ஓ'நீல், அமெரிக்க இராணுவ விமானப்படையில் அதிகாரியாக இருந்தார். கிட்டியின் குழந்தைப் பருவத்தில் இவரது தந்தை விமான விபத்தில் இறந்தார். இவரது தாயார், பாட்ஸி காம்ப்டன் ஓ'நீல், செரோகியை பூர்வீகமாகக் கொண்டவர். ஐந்து மாத வயதில், ஓ'நீல் ஒரே நேரத்தில் குழந்தை பருவ நோய்களால் பாதிக்கப்பட்டார்.[nb 1][4] தனது செவித்திறனை இழந்தார். இரண்டு வயதில் தனது காது கேளாமை வெளிப்படையாகத் தெரிந்த பிறகு, தாயார் இவருக்கு உதடு வாசிப்பு மற்றும் பேச்சைக் கற்றுக் கொடுத்தார். இறுதியில் பேச்சு சிகிச்சை நிபுணராக ஆனார். டெக்சாஸில் உள்ள விசிட்டா நீர்வீழ்ச்சியில் செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்காக ஒரு பள்ளியை இணைந்து நிறுவினார்.

ஒரு இளைஞியாக, கிட்டி, 10-மீட்டர் நடைமேடை நீச்சல் போட்டியிலும், 3-மீட்டர் ஸ்பிரிங்போர்டு போட்டியிலும் கலந்து கொண்டார். பின்னர் தொழில்முறை நீச்சல் தடகள சங்கத்தின் வாகையாளரானார்.[5] 1962 இல் நீச்சல் பயிற்சியாளர் சமி லீயிடம் பயிற்சி பெற்றார். 1964 ஒலிம்பிக்கிற்கான சோதனைகளுக்கு முன்பு, தனது மணிக்கட்டை உடைத்துக் கொண்டு, மூளையுறை அழற்சியால் பாதிக்கப்பட்டார்.[6][1] 1965இல் நடந்த காது கேளாதோருக்கான கோடை கால ஒலிம்பிக்கில் 100மீ பின்நீச்சல் மற்றும் 100மீ நீச்சலில் போட்டியிட்டார். [7] மூளைக்காய்ச்சலில் இருந்து மீண்ட பிறகு,[8] நீச்சலில் ஆர்வத்தை இழந்து, நீர் பனிச்சறுக்கு, இசுகூபா மூழ்கல், ஸ்கை மூழ்கல் மற்றும் ஹேங் கிளைடிங் ஆகியவற்றிற்கு திரும்பினார். நீச்சலில் "எனக்கு போதுமான பயம் இல்லை" என்று கூறினார்.[9] 20 வயதின் பிற்பகுதியில், இவர் புற்றுநோய்க்கான இரண்டு சிகிச்சைகளை மேற்கொண்டார்.[10]

பந்தய மற்றும் சண்டை வாழ்க்கை

தொகு

1970 வாக்கில், ஓ'நீல் தண்ணீர் மற்றும் நிலத்தில் பந்தயத்தை மேற்கொண்டார். பாஜா 500 மற்றும் மின்ட் 400 போட்டிகளில் பங்கேற்றார். மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது சண்டைக் கலைஞர்களான ஹால் நீதம் மற்றும் ரான் ஹாம்பிள்டன் ஆகியோரை இவர் சந்தித்தார். மேலும் ஹாம்பிள்டனுடன் சேர்ந்து வாழ்ந்தார். [nb 2]பின்னர், சிறிது காலம் பந்தயத்தை கைவிட்டார். 1970களின் நடுப்பகுதியில், நீதம், ஹாம்பிள்டன் மற்றும் டார் ராபின்சன் ஆகியோரிடம் பயிற்சி பெற்று, சண்டைப் பணிகளில் நுழைந்தார். 1976 ஆம் ஆண்டில், ஸ்டண்ட்ஸ் அன்லிமிடெட் என்ற முன்னணி சண்டை நிறுவனத்துடன் இணைந்து நடித்த முதல் பெண்மணி ஆனார் .[11]. ஒரு பெண் சண்டைக் கலைஞராக , இவர் தி பயோனிக் வுமன், ஏர்போர்ட் '77, தி ப்ளூஸ் பிரதர்ஸ், ஸ்மோக்கி அண்ட் தி பேண்டிட் II மற்றும் பிற தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்புகளில் தோன்றினார்.[9]

பிந்தைய ஆண்டுகளும் இறப்பும்

தொகு

1977 ஆம் ஆண்டில் மொகாவி பாலைவனத்தில், ஓ'நீல் ஹைட்ரஜன் பெராக்சைடு- மூலம் இயங்கும் ராக்கெட் டிராக்ஸ்டரை 279.5 மைல் (449.8 கிமீ/ம) வேகத்தில் ஓட்டிக் காட்டினார். விதிகளின்படி ஓட்டம் மீண்டும் செய்யப்படாததால், இது அதிகாரப்பூர்வ இழுவை பந்தய சாதனையாக அங்கீகரிக்கப்படவில்லை.[10]

1979 இல், ஓ'நீலின் அனுபவங்கள், ஸ்டாகார்ட் சானிங் நடித்த சைலண்ட் விக்டரி: தி கிட்டி ஓ'நீல் ஸ்டோரி என்ற சுயசரிதை திரைப்படத்திற்கு அடிப்படையாக அமைந்தது. திரைப்படத்தின் பாதி துல்லியமான சித்தரிப்பு என்று ஓ'நீல் கருத்து தெரிவித்தார்.[6][9]

ஓ'நீல் 1982 இல் சண்டை மற்றும் வேக வேலைகளில் இருந்து விலகினார். இவர் மைக்கேல்சனுடன் மினியாபோலிஸுக்குச் சென்றார், இறுதியில் ரேமண்ட் வால்டுடன் தெற்கு டகோட்டாவின் யுரேகாவுக்குச் சென்றார். தான் ஓய்வு பெற்றபோது, ஓ'நீல் நிலம் மற்றும் நீரில் 22 வேக சாதனைகளை படைத்திருந்தார். [10]

இவர் நவம்பர் 2, 2018 அன்று [6] தனது 72 வயதில், தெற்கு டகோட்டாவின் யுரேகாவில் நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார்.[12]

அஞ்சலி

தொகு

மார்ச் 24, 2023 அன்று, கிட்டி ஓ'நீலின் மரணத்திற்குப் பிந்தைய 77வது பிறந்தநாளை கூகுளின் கேலிச்சித்திரத்துடன் கூகுள் கொண்டாடியது.[13][14]

மேலும் படிக்க

தொகு
  • Moore, Matthew S.; Panara, Robert F. (1998). Great deaf Americans (2. ed., 2. print. ed.). Rochester, N.Y.: Deaf Life Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0963401661.
  • Ireland, Karin (1980). Kitty O'Neil, daredevil woman (Library ed.). New York, N.Y.: Harvey House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0817800042.
  • Libby, Bill; O'Neil, Kitty (1981). Kitty, a story of triumph in a soundless world (1st ed.). New York: Morrow. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0688003559.,

குறிப்புகள்

தொகு
  1. The list of diseases varies according to the source, many mentioning measles and smallpox, others listing measles, mumps and chicken pox. In a 1979 interview with the Washington Post, O'Neil mentions measles and smallpox.[2] Although not impossible, smallpox was a highly unlikely disease in 1940s Texas. Smallpox was extremely rare by then, but not quite eradicated. The last endemic case of smallpox in the United States was in 1949, in the Rio Grande valley of Texas.[3] The 1977 People article mentions chicken pox, a much more likely childhood disease.[4] Deafness is one possible outcome of both measles and mumps.
  2. News articles from the time reported that she was Hambleton's wife, which was not the case[9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Barnes, Mike (November 5, 2018). "Kitty O'Neil, Famed Hollywood Stuntwoman and Daredevil, Dies at 72". Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/kitty-oneil-dead-hollywood-stuntwoman-daredevil-was-72-1158193. 
  2. Hendrickson, Paul (May 5, 1979). "The Daredevil". Washington Post. https://www.washingtonpost.com/archive/lifestyle/1979/05/05/the-daredevil/89b14982-3b62-4eac-bb02-d0a634521b5f/. 
  3. "Last U.S. Smallpox Outbreak Left Mental Scars on Witnesses". Los Angeles Times. Associated Press. September 26, 2001. http://articles.latimes.com/2001/dec/26/news/mn-18048. 
  4. 4.0 4.1 Jares, Sue Ellen (January 4, 1977). "The Renaissance Woman of Danger—That's Tiny Kitty O'Neil". People. https://people.com/archive/the-renaissance-woman-of-danger-thats-tiny-kitty-oneil-vol-7-no-3/. 
  5. Cobb, Marnee (May 18, 1977). "The Day Kitty O'Neil Couldn't Break the Record". Lakeland Register. https://news.google.com/newspapers?nid=1346&dat=19770518&id=WXVhAAAAIBAJ&pg=7270,4969579. 
  6. 6.0 6.1 6.2 Smith, Harrison (November 4, 2018). "Kitty O'Neil, deaf daredevil who became 'world's fastest woman,' dies at 72". Washington Post. https://www.washingtonpost.com/local/obituaries/kitty-oneil-deaf-daredevil-who-became-worlds-fastest-woman-dies-at-72/2018/11/04/5d88dc9c-e044-11e8-8f5f-a55347f48762_story.html. 
  7. "Kitty Linn O'NEIL – ICSD".
  8. "Kitty Linn O'NEIL – ICSD".
  9. 9.0 9.1 9.2 9.3 Sandomir, Richard (November 6, 2018). "Kitty O'Neil, Stuntwoman and Speed Racer, Is Dead at 72". New York Times. https://www.nytimes.com/2018/11/06/obituaries/kitty-oneil-dead.html. 
  10. 10.0 10.1 10.2 "1976: Deaf stuntwoman Kitty O'Neil sets women's land-speed record". History. November 13, 2009. Archived from the original on November 6, 2018. பார்க்கப்பட்ட நாள் November 7, 2018.
  11. "First female member of Stunts Unlimited Kitty O'Neil Dies at 72". Stunts Unlimited. பார்க்கப்பட்ட நாள் 24 March 2023.
  12. "Kitty O'Neil – Oscars In Memoriam 2019". oscar.go.com.
  13. Desk, OV Digital (2023-03-23). "Google celebrates Kitty O'Neil birthday with a doodle". Observer Voice (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-23.
  14. Kitty O'Neil's 77th Birthday Google. Retrieved March 23, 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்டி_ஓ%27நீல்&oldid=3698015" இலிருந்து மீள்விக்கப்பட்டது