கிதேசி இசிகாவா
யப்பானிய தொல்பொருள் ஆய்வாளர்
கிதேசி இசிகாவா (Hideshi Ishikawa, 石川 日出志) யப்பானிய நாட்டினைச் சேர்ந்த தொல்லியலாளர் ஆவார். இவர் 1954 ஆம் ஆண்டு பிறந்தார். 1978 ஆம் ஆண்டு முதல் இவர் மீசி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையில் பேராசிரியராக உள்ளார். யாயோய் காலம் மற்றும் கொரிய தீபகற்பத்தின் வெண்கல இரும்பு கால வரலாறு மற்றும் கலாச்சாரம், [1] மற்றும் சோமோன் கலாச்சாரம் மற்றும் மட்பாண்டங்களில் நிபுணராகக் கருதப்படுகிறார். [2][3] 2008 ஆம் ஆண்டு யாயோய் சகாப்தத்தின் இடிபாடுகள் மற்றும் 2010 ஆம் ஆண்டு பண்டைய யப்பானிய வரலாற்றில் விவசாய சமூகம் பற்றிய புத்தகங்கள் உட்பட பல புத்தகங்களையும் ஆவணங்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "石川日出志" (in Japanese). Meiji University. பார்க்கப்பட்ட நாள் 11 May 2015.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Habu, Junko (29 July 2004). Ancient Jomon of Japan. Cambridge University Press. p. 274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-77670-7.
- ↑ 呉清恵 (November 2011). Cosmogonical Worldview of Jomon Pottery. 株式会社 三恵社. p. 213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-4-88361-924-5.