கிதேசு குமாரி
கிதேசு குமாரி (ஆங்கிலம்: Hitesh Kumari; இந்தி: हितेश कुमारी; பிறப்பு 18 மார்ச் 1942) உத்தரப்பிரதேசத்தின் பிற்படுத்தப்பட்ட தலைவர் ஆவார். இவள் லோதி இனத்தைச் சேர்ந்தவர். 1985-இல், இந்தியத் தேசிய காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி, புலந்த்சகர் மாவட்டத்தில் உள்ள டிபாய் சட்டமன்றத் தொகுதியின் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1988ல் உத்தரப்பிரதேச முதல்வர் நா. த. திவாரி இவரை நீர்வளத்துறை அமைச்சராக்கினார். புலந்த்சாகார் மாவட்டத்திலிருந்து இரண்டாவது பெண் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டத்தின் முதல் பெண் அமைச்சரும் ஆவார். இவர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுவின் (மத்திய அரசு, வேளாண் அமைச்சகம்) உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் குமாரி 2007-இல் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்.[2] மேலும் 2015ஆம் ஆண்டில் இவர் சமாஜ்வாடி கட்சியின் மகளிர் பிரிவின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2021ல் சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்களால் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.[3]
கிதேசு குமாரி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 1985–1989 | |
முன்னையவர் | சுவாமி நெம்பால் |
பின்னவர் | நெம்பால் |
தொகுதி | டிபாய், புலந்தசகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 மார்ச்சு 1942 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1985 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH". 14 August 2018. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
- ↑ "State Elections 2007 - Constituency wise detail for 365-Anupshahr Constituency of Uttar Pradesh". பார்க்கப்பட்ட நாள் 2 February 2016.
- ↑ "पूर्व मंत्री हितेश कुमारी बनीं सपा की राष्ट्रीय सचिव". 1 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.