கிந்தர் லால்

இந்திய அரசில்வாதி (1914-1991)

கிந்தர் லால் (Kinder Lal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கிந்தெர்லால் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1914 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 ஆம் தேதியன்று பிரித்தானிய இந்தியாவின் தௌலத்பூரில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1962, 1967,1971 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் கிந்தர்லால் வெற்றி பெற்றார். இராம் பியாரி என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர்.[1][2][3][4][5]

கிந்தர் லால்
Kinder Lal
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1962-1977
முன்னையவர்சேதா லால் குப்தா
பின்னவர்பர்மாய் லால்
பதவியில்
1984-1989
முன்னையவர்மண்ணி லால்
பின்னவர்பர்மாய் லால்
தொகுதிஆர்தோய், உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1914-06-17)17 சூன் 1914
Daulatpur, ஆர்தோய் மாவட்டம், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு5 அக்டோபர் 1991(1991-10-05) (அகவை 77)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இராம் பியாரி
பிள்ளைகள்1 மகன் மற்றும் 1 மகள்
மூலம்: [1]

1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதியன்று கிந்தெர் லால் தனது 77 ஆவது வயதில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "News". Rediff. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
  2. "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
  3. "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
  4. "Partywise Comparison since 1977 Hardoi Parliamentary Constituency". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
  5. "OBITUARY REFERENCES". Parliament of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிந்தர்_லால்&oldid=3847961" இலிருந்து மீள்விக்கப்பட்டது