கின்க்செம்
கின்க்செம் (Kincsem (அங்கேரிய உச்சரிப்பு: [ˈkint͡ʃɛm]; அங்கேரிய மொழியில் "என் விலைமதிப்பற்ற" அல்லது "என் பொக்கிசம்" என்று பொருள் ( 17, மார்ச் 1874 – 17, மார்ச் 1887) என்பது 54 பந்தயங்களை வென்ற, மிகவும் வெற்றிகரமான பந்தையக் குதிரை ஆகும். இந்தப் பெண் குதிரையானது அங்கேரியின் கிஸ்பெர் நகரில் 1874 ஆண்டு பிறந்தது.. இக்குதிரை அங்கேரியில் தேசிய அடையாளமாகவும், உலகின் மற்ற பகுதிகளிலும் மதிக்கப்படுகிறது. இக்குதிரை நான்கு பருவங்களில் பெண் மற்றும் ஆண் என இரு பால் குதிரைகளையும் எதிர்த்து ஐரோப்பா முழுவதும் பல்வேறு பந்தயங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
குடிவழி
தொகுகின்க்செமின் தந்தைக் குதிரை கம்பஸ்கேன் என்ற ஆண் குதிரை ஆகும். இதை இங்கிலாந்து மகாராணி விக்டோரியா வளர்த்துவந்தார். அந்தக் குதிரை ஹங்கேரிக்கு 1873 இல் விற்கப்பட்டது. கம்பேஸ்கேனுக்கும் ஒரு பெண் குதிரைக்கும் 1874 இல் பிறந்த குதிரைக் குட்டிதான், கின்க்செம்.[1]
பந்தைய வாழ்க்கை
தொகுகின்க்செம் தனது இரண்டாவது வயதில் 1876 இல் முதன்முறையாகப் பந்தயத்தில் கலந்து கொண்டது. அதே ஆண்டில் ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் வெவ்வேறு இடங்களில் நடந்த பத்து பந்தயங்களிலும் கின்க்செம் முதலிடம் பிடித்து, மக்களின் மனத்தை வென்றது. இது தன் வாழ்நாளில் 54 பந்தயங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்தச் சாதனை இதுவரை எந்தக் குதிரையாலும் முறியடிக்கப்படவில்லை.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ ASB – Kincsem (HUN) Retrieved on 2009-8-7
- ↑ முகில் (28 பெப்ரவரி 2018). "பிரபலக் குதிரைகள்: வெற்றிகளை ஈட்டிய குதிரைகள்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)