கியார்க் பெத்னோர்சு
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி யொஹான்னஸ் ஜியார்க் பெட்நோர்ட்ஸ் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
யோகானெசு கியார்க் பெத்னோர்சு (Johannes Georg Bednorz) என்பவர் செருமனி நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளர் ஆவார். 1950 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள் இவர் பிறந்தார். கே. அலெக்சு மியூலருடன் இணைந்து இவர் பீங்கான் பொருள்களின் உயர் வெப்பநிலை மீக்கடத்தி பண்புகளை கண்டறிந்தார். இதற்காக இயற்பியலுக்காக 1987 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நோபல் பரிசை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
யோகானெசு கியார்க் பெத்னோர்சு Johannes Georg Bednorz | |
---|---|
2013 ஆம் ஆண்டில் பெத்னோர்சு | |
பிறப்பு | 16 மே 1950 செருமனியின் வடக்கு ரைன் - வெசுட் பாலியா மாநிலத்தின் நியூயென்-கிர்சென் நகராட்சி |
தேசியம் | செருமனி |
துறை | இயற்பியல் |
ஆய்வு நெறியாளர் | எய்னி கிரானிச்சர் கே, அலெக்சு முல்லர் |
அறியப்படுவது | உயர் வெப்பநிலை மீக்கடத்தி |
விருதுகள் | மார்சல் பெனோயிசுட் பரிசு(1986) இயற்பியலுக்கான நோபல் பரிசு (1987) |
பிறப்பு
தொகுயோகானெசு கியார்க் பெத்னோர்சு செருமனியிலுள்ள உள்ள வடக்கு ரைன் - வெசுட் பாலியா மாநிலத்தின் நியூயென்-கிர்சென் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியரான ஆண்டான் மற்றும் பியானோ ஆசிரியர் எலிசபெத் பெத்நோர்சு தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பெற்றோர் இரண்டு பேருமே மத்திய ஐரோப்பாவின் சிலிசியா என்ற இடத்திலிருந்து வந்தவர்களாவர். இரண்டாம் உலகப்போரின் விளைவுகள் காரணமாக மேற்குநோக்கி செல்ல உந்தப்பட்டனர் [1].
ஆர்வம்
தொகுபெற்றோர் இவரை ஒரு பாரம்பரிய இசை ஆர்வலராக உருவாக்க முயற்சித்தனர். ஒர் இளைஞராக வயலின் மற்றும் தாரை இசைக் கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார் என்றாலும் இவருடைய ஆர்வம் மோட்டார்வாகனங்கள் மற்றும் மகிழுந்துகள் பற்றிய படிப்பின் பக்கம் இருந்தது. உயர்நிலை பள்ளியில் படிக்கும்போது இயற்கை அறிவியலில் ஆர்வம் கொண்டவராய் வேதியியல் மேல் கவனம் செலுத்தினார். சோதனைகள் வாயிலாக வேதியியலைக் கற்றுக்கொண்டார் [1].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 J. Georg Bednorz – Biographical. nobelprize.org
வெளி இணைப்புகள்
தொகு- [https://web.archive.org/web/20080109090719/http://www.magnet.fsu.edu/education/tutorials/pioneers/bednorz.html Pioneers in Electricity and Magnetism –