கியா மஸ்த் ஹே லைஃப்

தொலைக்காட்சி தொடர்

கியா மஸ்த் ஹே லைஃப் (Kya Mast Hai Life) என்பது ஒரு இந்தித் தொலைக்காட்சித் தொடர். இது டிஸ்னி சேனல் இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்டு ஏப்ரல் 27, 2009 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது, முன்னதாக ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26 ஆம் தேதிகளில் படப்பிடிப்புக் காட்சிகள் முன்னோட்டமாக ஒளிபரப்பப்பட்டன. ராகினி, ஜீஷான், ஜெனியா, வீர் மற்றும் ரீத்து ஆகிய ஐந்து இளவயதினரின் வாழ்க்கையை இத்தொடர் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

கியா மஸ்த் ஹே லைஃப்
உருவாக்கம்Buena Vista International
SOL
இயக்கம்Aarif Shaikh
நடிப்புSee below
முகப்பிசைKya Mast Mast Hai Life by Sangeeth Haldipur and Vasudha Varma
நாடுIndia
மொழிHindi
பருவங்கள்2(season 3 is in pre-production)
அத்தியாயங்கள்56 (as of season 2)
தயாரிப்பு
ஓட்டம்appr. 25 minutes
ஒளிபரப்பு
அலைவரிசைDisney Channel India
ஒளிபரப்பான காலம்April 27, 2009 –
Present

தயாரிப்பு தொகு

இந்த ஆண்டு டிஸ்னி சேனலின் கிட்சென்ஸ் 3 என்ற விடலைப் பருவத்தினரைப் பற்றிய துல்லியமான ஆய்வின் சாராம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

வால்ட் டிஸ்னி டெலிவிஷன் இன்டர்நேஷனல் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆன்டாய்ன் வில்லெனியுவ் கூறும்போது, "இன்றைய இளைய வயதினர் புத்திசாலிகளாகவும், வித்தியாசமானவர்களாகவும் உள்ளனர். கியா மஸ்த் ஹே லைஃப் தொடரானது இளவயதினரையும், அவர்களது குடும்பங்களையும், அவர்களது உலகம் மற்றும் குடும்பச் சூழலை எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.[1]

உசாத்துணைகள் தொகு

  1. "Disney Channel launches tween show 'Kya Mast Hai Life'". IndiaInfoline. 2009-04-03. பார்க்கப்பட்ட நாள் 2009-09-05.

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியா_மஸ்த்_ஹே_லைஃப்&oldid=3239971" இலிருந்து மீள்விக்கப்பட்டது