கியூபானைட்டு
கியூபானைட்டு (Cubanite) என்பது CuFe2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தாமிரம், இரும்பு, கந்தகம் ஆகிய தனிமங்கள் கலந்துள்ள இக்கனிமம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது [3].
கியூபானைட்டு Cubanite | |
---|---|
கியூபெக்கின் சிபகாமவு சுரங்கங்கத்திலிருந்து கிடைத்த அடுக்கு, சுழற்சி - இரட்டை கியூபானைட்டு படிகங்கள். (அளவுகள்: 1.5 x 1.3 x 1.0 செ.மீ) | |
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமம் |
வேதி வாய்பாடு | CuFe2S3 |
இனங்காணல் | |
நிறம் | வெங்கலம் முதல் பித்தளை வரையிலான மஞ்சள் |
படிக இயல்பு | தடிமனான படிகங்கள் நீளமான மிகப்பெரிய படிகங்கள் |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
இரட்டைப் படிகமுறல் | {110} இல் பொதுவான இரட்டைத் தளங்கள் சோடிகளாக, நான்கு மற்றும் ஆறு குறுகலான இணைப்பு போலி அறுகோணம் |
பிளப்பு | {110} மற்றும் {130} இல் பிளவு |
முறிவு | சங்குரு |
மோவின் அளவுகோல் வலிமை | 3.5-4 |
மிளிர்வு | உலோகம் |
கீற்றுவண்ணம் | கருப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 4.0-4.2 |
ஒளியியல் பண்புகள் | மெருகூட்டப்பட்ட மேற்பரப்பில் தெளிவான திசைமாற்றம் |
பிற சிறப்பியல்புகள் | வலிமையான காந்தம் |
மேற்கோள்கள் | [1][2][3] |
கியூபா நாட்டில் ஓரியண்ட் மாகாணத்தின் மாயாரி-பராகோவா பட்டையில் 1843 ஆம் ஆண்டு முதன்முதலாக கியூபானைட்டு கண்டுபிடிக்கப்பட்டது [1].
உயர் வெப்பநிலையில் நீர்வெப்ப படிவுகளில் கியூபானைட்டு தோன்றுகிறது. இக்கனிமத்துடன் பைரோடைட்டு, பெண்டியண்டைட்டு சால்கோபைரைட்டு உள்ளிட்ட கனிமங்களுடன் சேர்ந்து கியூபானைட்டு கிடைக்கிறது. சால்கோபைரைட்டின் உருகிய பாறை பிரிவிலிருந்து 200 முதல் 210° செல்சியசு வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையில் கியூபானைட்டு தோன்றுகிறது [2]. கரிமப்பாறை வேதியெரிகல் விண்வீழ் கற்களிலிருந்தும் கியூபானைட்டு கனிமம் கிடைப்பதாக கருதப்படுகிறது [2].
பன்னாட்டு கனிமவியல் சங்கம் கியூபானைட்டு கனிமத்தை Cbn[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Mindat.org
- ↑ 2.0 2.1 2.2 Handbook of Mineralogy
- ↑ 3.0 3.1 Webmineral
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- Schumann, Walter (1991). Mineralien aus aller Welt. BLV Bestimmungsbuch (2 ed.). p. 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-405-14003-X.