கியூபா நாட்டுப்பண்
யுத்தத்துக்கு தயாரான பயாமோ மக்களே (El Himno de Bayamo ) என்பது கியூபாவின் நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் முதலில் 1868 இல் ஸ்பெயினுக்கு எதிராக நடந்த பயோமோ போரின்போது பாடப்பட்டது. போரில் கலந்துகொண்ட பெட்டரோ (முழுப் பெயர் பெட்ரோ ஃபிலிப்ஃபிகூரடோ ) என்பவரால் இயற்றப்பட்ட பாடல் இது. லா பாயாமிசா என்று அழைக்கப்படும் இந்தப் பாடலுக்கு 1867 இல் இசையமைக்கப்பட்டது.
ஆங்கிலம்: The Bayamo Anthem | |
---|---|
கியூபா தேசியம் கீதம் | |
எனவும் அறியப்படுகிறது | La Bayamesa (ஆங்கிலம்: The Bayamo Song) |
இயற்றியவர் | பெட்ரோ ஃபிலிப்ஃபிகூரடோ |
இசை | பெட்ரோ ஃபிலிப்ஃபிகூரடோ (அன்டோனியோ ரோட்ரிக்ஸ்-ஃபெரர் அறிமுக இசை), 1867 |
சேர்க்கப்பட்டது | 1902 |
இசை மாதிரி | |
யுத்தத்துக்கு தயாராவோம் பயாமோ மக்களே (இசைக்கருவியில்) |
வரலாறு
தொகு1868 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று பயோமா நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டு அலுவலர்கள் கியூப படைகளிடம் சரண்டைந்தனர். இந்த வெற்றியைக் கொண்டாடி ஆடிப்பாடிய மக்கள், தாங்கள் இசைந்த்த மெட்டுக்கு பாடல்வரிகளை எழுதிதித் தரும்படி பெருச்சோவிடம் கேட்க, உடனே அவர் குதிரை சேணத்தில் அமர்ந்தபடியே அந்த மெட்டுக்கு பாடல் எழுதினார். இந்தப்பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக உள்ள பாடலைவிட நெடியதாக இருந்தது. இது நடந்த இரு ஆண்டுகளுக்குப்பின் இவர் ஸ்பானியர்களிடம் பிடிபட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை சுட்டுக்கொல்லும்படி ஆணையிருவதற்கு சில நொடிகளுக்கு முன்புகூட இந்தப்பாடலை உரக்கப்பாடினார்.[1] பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம். அதிகாரப்பூர்வமாக 1902 இல் கியூபாவின் நாட்டுப்பண்ணாக இப்பாடல் ஏற்கப்பட்டது. 1959 ஆண்டு புரட்சிக்கு பின்னரும், இப்பாடலை கியூபா தக்க வைத்து கொண்டது, இப்பாடலின் துவக்கத்தில்வரும் அறிமுக இசையை கியூபா இசையமைப்பாளர் அன்டோனியோ ரோட்ரிக்ஸ்-ஃபெரர் வடிவமைத்தார்.[1]
வரிகள்
தொகுஉண்மையில் இந்தப் பாடல் ஆறு பத்திகளைக் கொண்டிருந்தது. பாடலின் இறுதி நான்கு பத்திகளில் ஸ்பெயின் எதிர்ப்பு வரிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் அவை நீக்கப்பட்டன. தற்போது முதல் இரண்டு பத்திகள் மட்டும் நாட்டுப்பண்ணாகப் பாடப்படுகிறது.
வரிகள்
தொகுஎசுபானிய மொழியில் | தமிழ் ஒலிபெயர்ப்பு | தமிழ் மொழிபெயர்ப்பு[2] |
---|---|---|
|
|
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Symbols of the Cuban nation". Archived from the original on 2016-12-28. பார்க்கப்பட்ட நாள் 2016-08-18.
- ↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (17 ஆகத்து 2016). "புரட்சி தேசத்தின் போர்ப் பரணி!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2016.