கியூ ஜிஸ்

கியூ.ஜிஸ் (கியூ.ஜிஐஎஸ், QGIS), இதற்கு முன்னால் குவாண்டம் ஜிஐஎஸ் (குவாண்டம் ஜிஸ், Quantum GIS), [1] என்பது புவிசார் தகவல்களை பார்க்கவும், தொகுக்கவும், அலசவும் மேற்கொள்ள பயன்படும் மேசைத்தள கணினிகளுக்கான ஒரு புவிசார் தகவல் கட்டகம் (GIS - Geographic Information System) மென்பொருள்.

கியூஜிஸ்
QGIS
QGIS logo, 2017.svg
QGIS 2.2 Valmiera showing new menu design.png
QGIS 2.2
உருவாக்குனர்கியூ.ஜிஸ் உருவாக்கக் குழு
தொடக்க வெளியீடுசனவரி 2009 (2009-01)
அண்மை வெளியீடு2.6 (Brighton) / நவம்பர் 1, 2014; 7 ஆண்டுகள் முன்னர் (2014-11-01)
மொழிசி++Qt
தளம்Cross-platform
மென்பொருள் வகைமைபுவியியல் தகவல் முறைமை
உரிமம்ஜிபிஎல்
இணையத்தளம்http://qgis.org/

உருவாக்கம்தொகு

கியூ.ஜிஸ் உருவாக்கம் 2002ஆம் ஆண்டின் முதல்சில மாதங்களில் கேரி செர்மன் என்பவரால் துவக்கப்பட்டது, அதன்பின் 2007ஆம் ஆண்டு அது திறாமூல புவியிட நிறுவனத்தின் (Open Source Geospatial Foundation) அடைகாப்புத் திட்டங்களில் ஒன்றானது. இதன் முதல் வெளியீட்டு பதிப்பு 1.0 (version 1.0) 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

கியூ.ஜிஸ், சி++ மொழியில் எழுதப்பட்டது. இதன் வரைபடப் பயனாளர் இடைமுகப்பு அல்லது சியுஐ (GUI) கியூ.டி(Qt) நிரலகத்தை கொண்டு எழுதப்பட்டது. கியூ.ஜிஐஎஸ், சி++ மற்றும் பைத்தான் மொழிகளில் புது நீட்சிகளை (plugins) உருவக்கி பயன்படுத்த அனுமதிக்கிறது. கியூ.டி(Qt) தவிர கியூ.ஜிஐஎஸ், சி இஓஎசு (GEOS), எசு.கியூ.லைட் (SQLite) ஆகிய மென்கல நிரலகங்களைச் சார்ந்துள்ளது. சிடிஏஎல் (GDAL), கிராசு ஜிஐஎஸ் (GRASS GIS, போசிட்டு.சி.ஐஎசு (PostGIS), மற்றும் போஸ்கிரெஸ்குயெல் (PostgreSQL) ஆகிய மென்கல நிரலகங்கள் பரிந்துரைக்கப்படுபவை ஆகும்.

உரிமம்தொகு

கியூ.ஜிஸ் ஓர் இலவச மென்கலனாக குனூ பொது உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகிறது. இதை பயன்பாட்டிற்குத் தகுந்தாற்போல் மாற்றி பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. மேலாக இதன் நீட்சிகளைக் கொண்டும் இதன் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

நடைமுறைச் சாருமைதொகு

கியூ.ஜிஸ் போசிட்டு.சி.ஐஎசு (PostGIS), கிராசு (GRASS), மற்றும் மேப்செர்வர் (MapServer) போன்ற இதர இலவச பொதிகளுடன் இணைந்து செயல்படும் வல்லமை படைத்தது. இதன் கிராசு (GRASS) நீட்சி கிராசு பொதியின் செயல்பாட்டை மற்ற பொதிகளுடன் இணைந்து ஒரு முழுமையான ஜிஐஎஸ் (GIS) மென்கலமாகச் செயல்படுத்த உதவுகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. QGIS (September 2013). "What's new in QGIS 2.0". 2013-09-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்தொகு

  • QGIS இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூ_ஜிஸ்&oldid=3344948" இருந்து மீள்விக்கப்பட்டது