கியூ 4 இயக்கு தளம்

டெபியன் குனூ/லினக்சை அடிப்படையாக கொண்ட இயக்கு தளம்

கியூ 4 இயக்கு தளம் (Q4OS) என்பது டெபியனை அடிப்படையாக கொண்ட லினக்சு வழங்கலாகும். இந்த வழங்கலானது சூலை 4, 2013 ல் விண்டோசு எக்சு. பி. யின் ஆதரவு (Support) முடிவதற்குள் அதன் முதல் பதிப்பு 0.5.0 வெளியிடப்பட்டது. இது கணினியின் விலையை குறைப்பதற்கும், பயனர்கள் எளிமையாக பயன்படுத்துவதற்கும் உதவுகிறது. மேலும் குறிப்பாக, மேசைக் கணினியாக (Desktop Computer) இருக்கலாம் அல்லது மடிக்கணினியாக (Laptop) இருக்கலாம். அதற்கான இயக்கு தளம் என்றால் அனைவருக்கும் தெரிந்ததெல்லாம் விண்டோசு இயக்கு தளம் மட்டும். நாம் வாங்கும் ஒவ்வொரு கணினியில் இயங்கும் உரிமம் பெற்ற இயக்கு தளத்திற்கு கொடுக்கும் விலையை தெரிந்து கொண்டால் சிலருக்கு மலைப்பாக இருக்கிறது. உரிமம் பெற்ற அசல் (Original) விண்டோசு இயக்கு தளத்தின் விலை மிகவும் உயர்வானதாகும். விண்டோசு இயக்கு தளம் இல்லாமல், இந்த திறந்த மூல இயக்கு தளமானது முற்றிலும் இலவசமாக கிடைத்தாலும் விண்டோசு இயக்கு தளத்தில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் பெற முடியும்.[2] இதில் எக்சு. பி. கியூ 4 (XPQ4) எனப்படும் இணைக்கூறு (Add-on) விண்டோசு எக்சு. பி. யின் தோற்றத்தையும் உணர்வையும் (Look and feel) பிரதிபலிக்கும் நோக்கத்துடன் கருப்பொருள்களைச் (Themes) சேர்க்கிறது.[3][4][5]

கியூ 4 இயக்கு தளம்

கியூ 4 இயக்கு தளத்தின் டிரினிட்டி திரைப்புலச் சூழல்
விருத்தியாளர் கியூ 4 இயக்கு தள தயாரிப்புக் குழுமம் (Q4OS Development team)
இயங்குதளக்
குடும்பம்
லினக்சு
மூலநிரல் வடிவம் திறந்த மூலம் (Open source)
முதல் வெளியீடு 0.5.0[1] / 4 சூலை 2013; 10 ஆண்டுகள் முன்னர் (2013-07-04)
கிடைக்கும் மொழிகள் பன்மொழி (Multilingual)
மேம்பாட்டு முறை ஏபிடி மென்பொருள்
தொகுப்பு மேலாளர் dpkg
நிலைநிறுத்தப்பட்ட
இயங்குதளம்
x86-64, i386, armhf, arm64
கருனி வகை லினக்சு கருனி (Linux kernel)
இயல்பிருப்பு இடைமுகம் டிரினிட்டி, கேடிஈ பிளாசுமா
அனுமதி கட்டற்ற மென்பொருள் உரிமங்கள் (Free software licenses) (குறிப்பாக குனூ பொதுமக்கள் உரிமம்(GNU GPL)) + சில தனியுடைமைகள் (Proprietary)
தற்போதைய நிலை நடப்பு (Current)
வலைத்தளம் q4os.org இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

அம்சங்கள்

  • இது டிரினிட்டி அல்லது கேடிஈ பிளாசுமா திரைப்புலச் சூழலுடன் (Desktop Environment) வருகிறது,
  • தோற்ற மாற்றி (Look Switcher), இது பயனர் காட்சி கருப்பொருள்களை மாற்ற உதவுகிறது.
  • மேசை வடிவ மாற்றி (Desktop Profiler), இது தானாக சில பொதிகள் (Packages) மற்றும் நிரல்களை (Programs) நிறுவுகிறது.
  • கியூ 4 இயக்கு தளத்தின் மென்பொருள் மையம் (Q4OS Software Centre), பட்டியலிலிருந்து சில பரிந்துரைக்கப்பட்ட பொதிகள் மற்றும் நிரல்களை நிறுவ பயனரை அனுமதிக்கிறது.
  • கியூ 4 இயக்கு தளத்தின் வரவேற்புத் திரை (Q4OS Welcome Screen), சில ஆரம்ப மாற்றங்களுடன் (Initial tweaks) பயனருக்கு உதவுகிறது.

வரவேற்பு

  • சோர்சுஃபோர்கி கியூ 4 இயக்கு தளத்தை ஏப்ரல் 2020 இல் மாதத்தின் "சமூகத் தேர்வு" திட்டமாக சிறப்பித்தது. [6]
  • ஜனவரி 2022 இல், டெக்ரேடார் அதன் விண்டோசு நிறுவி (Installer) மற்றும் பழைய வன்பொருளுக்கான (Older hardware) ஆதரவு, குறிப்பாக 32 இரும செயலிகளில் (ஆங்கிலத்தில் 32-bit processors) இயங்கும் கணினிகளுக்கான கியூ 4 இயக்கு தளத்தை ஆண்டின் சிறந்த லினக்சு வழங்கல்களில் ஒன்றாகக் கருதியது.[7]

மேற்கோள்கள்

  1. "Q4OS Website Archived on Wayback Machine At 7th July 2013". Archived from the original on 2013-07-07. பார்க்கப்பட்ட நாள் 2024-02-11.
  2. Wallen, Jack (2018-02-16). "Q4OS Makes Linux Easy for Everyone". Linux.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-30.
  3. Germain, Jack M. (2015-03-18). "Q4OS Is a Bare-Bones Business Tool". TechNewsWorld (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-30.
  4. Stahie, Silviu (2014-09-09). "Q4OS 0.5.18 Is an Almost Exact Linux Replica of Windows XP – Gallery". Softpedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-07.
  5. "Q4OS - கணியம்". kaniyam.com. பார்க்கப்பட்ட நாள் 2024-02-12.
  6. "April 2020, "Community Choice" Project of the Month – Q4OS". SourceForge Community Blog (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-03.
  7. Sharma, Shashank; Peers, Nick; Cox, Alex; Drake, Nate; Sharma, Mayank (2022-01-17). "Best lightweight Linux distros of 2022". TechRadar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-27.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூ_4_இயக்கு_தளம்&oldid=4021321" இலிருந்து மீள்விக்கப்பட்டது