கிரண் காய்
இந்திய அரசியல்வாதி
கிரண் காய் (Kiran Ghai; பிறப்பு ஆகத்து 23,1949) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சி தேசியத் துணைத் தலைவரும் ஆவார்.[1][2] இவர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சட்டமேலவை உறுப்பினராகவும் பீகார் சட்டமன்றக் குழுவின் குழந்தை பாதுகாப்பு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.[3] இதற்கு முன்னர் இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக இருந்துள்ளார்.
கிரண் காய் | |
---|---|
உறுப்பினர்-பீகார் சட்டமேலவை | |
பதவியில் 22 சூலை 2004 – 21 சூலை 2016 | |
தொகுதி | சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 ஆகத்து 1949 திகா, பட்னா, பீகார் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | பட்னா பல்கலைக்கழகம் (முதுகலை) |
தொழில் | பேராசிரியர், அரசியல்வாதி |
மூலம்: [1] |
அரசியலுக்கு வருவதற்கு முன்னர் பாட்னாவில் உள்ள பட்னா மகளிர் கல்லூரியில் இந்தி துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். 48ஆவது மற்றும் 50ஆவது தேசியத் திரைப்பட விருதுகளுக்குத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shrimati Kiran Ghai Sinha, Member Bihar Vidhan Parishad". Bihar Vidhan Parishad, Patna. பார்க்கப்பட்ட நாள் 17 July 2013.
- ↑ "BJP spokesperson Ghai assails appointments". Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 21 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2003-06-23.
- ↑ "13 women in new BJP Team". Business Standard (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2013-01-21.