கிரண் செகாவத்

கிரண் சேகாவத் (Kiran Shekhawat) (1 மே 1988 - 24 மார்ச் 2015) தனது பணியின்போது உயிர்த்தியாகம் செய்தவர்களின் வரிசையில் முதல் இந்தியக் கடற்படை பெண் அதிகாரி ஆவார். 24 மார்ச் 2015 அன்று கோவா கடற்கரையில் டோர்னியர் விமானத்தில் சென்றபோது இவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி இறந்தார். இவரது கணவர் விவேக் சிங் சோக்கரும் ஒரு கடற்படை அதிகாரியாவார்.[1]

கிரண் செகாவத்

சுயசரிதை

தொகு

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

லெப்டினன்ட் கிரண் சேகாவத் 1988 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி மும்பையில் ஒரு கடற்படைக் குடும்பத்தில் கௌரவ லெப்டினன்ட் விஜேந்திர சிங் செகாவத் மற்றும் மது சவுகான் ஆகியோருக்கு பிறந்தார். இவர்கள் குடும்பம் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தின் கேத்ரி வட்டத்திலுள்ள செபர்குவார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். விசாகப்பட்டினத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயா -2 ல் இருந்து பள்ளிப்படிப்பை முடித்த இவர், பின்னர் ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் இவர் 2010 இல் கேரளாவின் எழிமலையிலுள்ள இந்தியக் கடற்படை கல்விக் கழகத்தில் (ஐ.என்.ஏ) சேருவதற்கு முன்பு ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்தார். இவர் குருகிராம் அருகிலுள்ள குர்தலாவைச் சேர்ந்த சக கடற்படை அதிகாரி லெப்டினன்ட் விவேக் சிங் சோக்கரை மணந்தார். அங்கு இவரது மாமியார் சுனிதா சோக்கர் ஒரு விவசாயியாவார். மேலும், இவரது குடும்பத்திற்கு சில விவசாய நிலங்கள் இருந்தன.

கடற்படை வாழ்க்கை

தொகு

5 சூலை 2010 இல் நியமிக்கப்பட்ட லெப்டினென்ட் செகாவத், இந்திய கடற்படை விமானப் படை (ஐஎன்ஏஎஸ்) 310 இல் சேர்ந்தார் - ("கோப்ரா" என்ற புனைபெயர் கொண்ட ஒரு முதன்மை ஐ.டபிள்யூ படை) இவரது ஐந்தாண்டு வாழ்க்கையில், இவர் பல்வேறு கடற்படை நிலையங்களில் பணியமர்த்தப்பட்டார். பின்னர், 2015 இல் கோவாவுக்கு மாற்றப்பட்டார். உளவுத்துறை போரில் நிபுணராக இருந்த இவர், சுற்றுச்சூழல் வரைபடங்களையும், புலனாய்வு பகுப்பாய்விற்குத் தேவையான பல்வேறு அளவுருக்களையும் பதிவு செய்து கொண்டிருந்தார்.

இவர், பறப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கடமையில் இல்லாதபோது, என்றீக் இக்லெசியாசு மற்றும் சானியா டுவைன் ஆகியோரின் இசையை நடனம் செய்வதையும் கேட்பதையும் விரும்பினார். எழுத்தாளர் நிக்கோலஸ் ஸ்பார்க்ஸின் பெரிய ரசிகரான இவர் அவரது எல்லா புத்தகங்களையும் படித்தார் அல்லது அவற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைப் பார்த்தார். ஒரு பார்வையாளராக, சனவரி 2015 குடியரசு தின அணிவகுப்பின் போது கடற்படையின் முதல் அனைத்து பெண்கள் அணிவகுப்புக் குழுவில் பங்கேற்றார். இவரது தந்தை கடற்படையில் சமையல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார் தற்போது இப்போது அவரது நினைவாக லெப்டினென்ட் கிரண் சேகாவத் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது கணவர் லெப்டினன்ட் விவேக் சிங் சோக்கர், கேரளாவிலுள்ள எழிமலை கடற்படை கல்விக் கழகத்தில் ஒரு பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இறப்பு

தொகு

24 மார்ச் 2015 அன்று ஒரு இரவு நேரத்தில் நாட்டின் கடல் எல்லைகளை மீறும் விரோதக் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் ஈடுபடுவதற்கும் கடலுக்கு மேலே பறந்து தந்திரோபாய வகைகளில் ஈடுபட்டிருக்கும் போது இவர் பறந்த இந்திய கடற்படை டோர்னியர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் இவருடன் பயணம் செய்த இணை விமானி லெப்டினட் அபினவ் நாகோரி மற்றும் தளபதி நிகில் ஜோஷி ஆகியோர் அடங்கிய திறமையான அதிகாரிகளும் இறந்து போயினர்.

குறிப்புகள்

தொகு
  1. Times News Network (30 March 2015). "First woman officer to martyr in line of duty, Lt Kiran Shekhawat, cremated with full honours". Times of India website. பார்க்கப்பட்ட நாள் 2 September 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_செகாவத்&oldid=3448426" இலிருந்து மீள்விக்கப்பட்டது