கிரண் பாலா போரா

கிரண் பாலா போரா (Kiran Bala Bora அஸ்ஸாமி: কিৰণ বালা বড়া; 1904 - 8 ஜனவரி 1993) ஒரு சுதந்திர போராட்ட வீரர், மற்றும் இந்தியாவின் அசாமி சமூக ஆர்வலர் ஆவார். இந்தியாவின் விடுதலைக்காகப் பங்களித்த 1930 கள் மற்றும் 1940 களில் நடந்த ஒத்துழையாமை இயக்கங்களில் பங்கேற்றதற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கிரண் பாலா போரா நகோன் மாவட்டத்தில், வட ஐபோரகான் கிராமத்தில் 1904 ஆம் ஆண்டில் பிறந்தார் . கமல் சந்திரா பண்டிட் மற்றும் சரோஜ் அதியூ ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை கமல் சந்திர பண்டிட் பள்ளி ஆசிரியராக இருந்தார். அந்த நேரத்தில் இந்திய சமூகத்தில் பெண்களை பள்ளிக்கு அனுப்புவதில் இருந்த கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் கிரண் 3 ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்தார். இவர் நகோன் மாவட்டம், பரோலி குரியினைச் சேர்ந்த சகி ராம் இலசுகர் என்பவரைத் திருமணம் செய்தார்.திருமணத்திற்குப் பிறகான சில காலங்களிலேயே இவரது கணவர் இறந்தார்.கமல் சந்திரா கிரணின் இளம் மகளுடன் கிரானை வீட்டிற்கு அழைத்து வந்தார். இவர் தனது இளம் வயதிலேயே நாட்டின் புரட்சிகர இயக்கங்களில் ஆர்வம் காட்டினார்.

இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கு பங்களிப்பு தொகு

குறிப்பாக ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகு, பிரித்தானிய ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணம் 1920 கோடை காலத்தில் புத்துயிர் பெற்ற்றது. காந்தி தலைமையில், இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான மக்கள் அகிம்சை போராட்டங்களில் பங்கேற்றனர். கிரண் சுதந்திர போராட்ட தலைவர்கள் தியாகங்கள் மற்றும் சவால்களால் ஈர்க்கப்பட்டு அதில் பங்கேற்க முடிவு செய்தார். இவர் இயக்கத்தின் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் மற்றும் படிப்படியாக அதற்காக தனது முழு நேரத்தையும் அர்ப்பணித்தார். நிதி திரட்டுவதற்கான இவரது முயற்சிகள் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் காங்கிரசுவின் வேகத்தை அதிகரிக்க உதவிய ஒரு முக்கிய காரணியாகும். பூர்ண சந்திர சர்மா, மஹிதர் போரா, ஹலதர் புயான், மற்றும் தேவகாந்தா பாருவா போன்ற தலைவர்களின் ஊக்கமும் ஒத்துழைப்பும் இவரை வலுவான சுதந்திரப் போராட்ட வீரராக மாற உதவியது. இந்த நேரத்தில், இவர் அசாமில் இருந்து ஒரு சிறந்த எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான சந்திரபிரவ சைகியானியையும் சந்தித்தார். கிரண் இவருடன் இணைந்து மற்றும் இவரது வழிகாட்டுதலின் கீழ் நிறைய சமூக காரணங்களுக்காக பணியாற்றினார்.

கிரண் பாலா போரா ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கங்களில் ஒன்றான வெளிநாட்டு பொருட்களின் பயன்பாட்டை புறக்கணிப்பதில் ஈடுபட்டார். இது போன்ற ஒரு சம்பவத்தில், இவர் தனது சொந்த வீட்டின் அனைத்து வகையான மதிப்புமிக்க வெளிநாட்டு பொருட்களையும் உடைகள் உட்பட எரித்தார், பின்னர் மற்றவர்களையும் இவ்வாறே செய்யுமாறு வழிநடத்தினார். ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை வாங்குவதற்குப் பதிலாக, இவள் பருத்தியைச் சுழற்றி தன் துணியைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.

லாகூர் காங்கிரஸ், 1929 இல், 26 ஜனவரி 1930, பூர்ண ஸ்வராஜ் (அல்லது முழுமையான சுதந்திரம்) தினமாக கொண்டாட முடிவு செய்தது. அதன்படி, கோலியபோரில் 400 க்கும் மேற்பட்ட பெண்கள், கிரண் பாலா தலைமையில், அரசாங்கத்தை மீறி கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். பெண்கள் பங்கேற்பதை காவலர்கள் தடுத்தனர், மேலும் பலர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. [2]

சுதந்திரத்திற்கு பிறகு தொகு

இந்தியாவின் மாநில மற்றும் மத்திய அரசுகளால் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. [3] [4]

சான்றுகள் தொகு

  1. Bora, Nilima. Gogoi, Swarna Baruah. ed. Luit paror Mahila Swadhinota Sangramir Jivan Gatha. Guwahati, Assam: District Library Guwahati, Assam, India. பக். 39. 
  2. Pathak, Guptajit. "Reflection of Young Martyr Kanaklata Barua and the Dependability of Assamese Women in India's Freedom Movement". The Creative Launcher 1 (2). http://www.thecreativelauncher.com/upload/10Guptajit%20Pathak.pdf. பார்த்த நாள்: 14 December 2016. 
  3. Government of Assam's Freedom Fighter Pension no: Pol/2791
  4. Government of India's Freedom Fighter Pension no: Pol/C/1137
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_பாலா_போரா&oldid=3290258" இலிருந்து மீள்விக்கப்பட்டது