சந்திரபிரபா சைகியானி

சந்திரபிரபா சைகியானி (Chandraprabha Saikiani16 மார்ச் 1901 - 16 மார்ச் 1972) அல்லது சந்திரபிரவா சைகியானி பெண்ணிய இயக்கத்தின் முன்னோடியாக கருதப்படும் இவர் ஓர் அசாமிய சுதந்திரப் போராளி, ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.[1][2] இவர் அனைத்து அசாம் பிரதேச மகளிர் சமிதியின் நிறுவனர் ஆவார், இது அஸ்ஸாம் பெண்களின் நலனுக்காக பணியாற்றும் அரசு சாரா நிறுவனம் ஆகும்.[3] இந்திய அரசாங்கத்தின் 1972 ஆம் ஆண்டிற்கான நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமை விருதான பத்மசிறீ விருது பெற்றார்.[4] மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் 2002 ஆம் ஆண்டில் சமூக சீர்திருத்தவாதிகள் என்ற தொடரின் கீழ் சைக்கியானியின் நினைவு முத்திரையை வெளியிட்டது [5]

சந்திரபிரபா சைகியானி

1932 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமறுப்பு இயக்கம் மற்றும் 1920-21 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இவர், சுதந்திர இந்தியாவில் அரசியலில் நுழைந்த முதல் பெண் எனும் சாதனை படைத்தார். சைகியானி ஒரு புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் கம்ரூப் மாவட்டத்தின் டோய்சிங்கரி கிராமத்தில் ரதிராம் மசும்தார் (கிராமத் தலைவர்) மற்றும் கங்கப்ரியா மசும்தார் ஆகியோருக்கு 1901 மார்ச் 16 அன்று "சந்திரப்ரியா மஜும்தார்" (சந்திரப்ரியா தாஸ்) ஆகப் பிறந்தார்.[6] இவர் பதினொரு குழந்தைகளில் ஏழாவது குழந்தை ஆவார்..

இவரது சகோதரி ரஜனிபிரபா சைகியானியுடன் (பின்னர் அசாமின் முதல் பெண் மருத்துவர் ஆனார்), இவர்கள் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆண்கள் பள்ளியில் (பெண் பள்ளி இல்லை) கலந்து கொள்ள இடுப்பில் ஆழமான சேற்றினைக் கடந்து சென்று கல்வி கற்றனர். இவர்களின் முயற்சி பள்ளி துணை ஆய்வாளரான நீலகண்ட பாருவாவை ஈர்த்தது, மேலும் நாகாவ் மிஷன் பள்ளிக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.[7] நாகாவ் மிஷன் பள்ளியில், கிறிஸ்தவ மதத்திற்கு மாற முன்மொழிந்ததை நிராகரித்த பிறகு இவரை பெண் விடுதியில் தங்க பள்ளி அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.எனவே அதிகாரிகளுக்கு எதிராகப் போராடினார். பின்னர் இவர் விடுதியி சேர்க்கப்பட்டார்.[8]

பள்ளிக் கல்விக்குப் பிறகு, உள்ளூர் படிப்பறிவற்ற பெண்களைச் ஒன்று சேர்த்து, பள்ளியில் படித்ததை பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு தற்காலிகக் கொட்டகையில் மற்றவர்களுக்கு கற்பித்தார்.[7] விடுதி கண்காணிப்பாளரால் இந்து மாணவர்களுக்கு பாரபட்சமாக நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது இவரது சமூக செயல்பாடு தொடங்கியது.[1]

ஒரு வயதான நபரைத் திருமணம் செய்து கொள்வதற்கான பெற்றோரின் உறுதிப்பாட்டை இவர் மறுத்துவிட்டாள் [9] ஒரு ஆசாமிய எழுத்தாளரான தண்டிநாத் கலிதாவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டாள்.[10]

சமூக மற்றும் அரசியல் வாழ்க்கை

தொகு

சைகியானி ஒரு நகோனில் உள்ள ஆரம்ப பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் தேஜ்பூரில் உள்ள எம் இ பள்ளியில் தலைமை ஆசிரியராக ஆனார் .[1]

இவர் தேஜ்பூரில் தங்கியிருந்தபோது, ஜோதிபிரசாத் அகர்வாலா, ஒமியோ குமார் தாஸ், சந்திர நாத் சர்மா , லக்கிதர் சர்மா போன்ற பிரபலங்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.[11] 1918 ஆம் ஆண்டில், அசோம் சத்ரா சான்மிலனின் தேஸ்பூர் அமர்வில், இவர் ஒரே பெண் பிரதிநிதியாக இருந்தார் மற்றும் அபின் உணவின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்து ஒரு பெரிய கூட்டத்தில் உரையாற்றினார் மற்றும் அதை தடை செய்யக் கோரினார்.[1] ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்னால் ஒரு பெண் பேசிய முதல் நிகழ்வு அதுவாகும்.

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Rina Sonowal Kouli (2015). "Chandraprabha Saikiani : The Path-Breaking Lady of Assam". Press Information Bureau, Government of India. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.
  2. Mitra Phukan (7 March 2015). "Remembering Chandraprabha Saikiani". Thumb print magazine. Archived from the original on 8 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Background and Formation of Assam Pradeshik Mahila Samity" (PDF). Shod Ganga. 2015. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "Indian Postage Stamps". Department of Posts, Government of India. 2015. Archived from the original on 16 March 2015. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.
  6. "Chandraprabha Saikiani: The Path-Breaking Lady of Assam", PIB, Government of India
  7. 7.0 7.1 "The Legendary Crusader". Assam Times. 16 March 2010. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.
  8. "Chandraprabha Saikiani (1901-1972)". Stree Shakthi. 2015. பார்க்கப்பட்ட நாள் 5 June 2015.
  9. "Leader of Women's Liberation". Muse India. 2015. Archived from the original on 5 April 2015. பார்க்கப்பட்ட நாள் 5 June 2015.
  10. Literary Vision. Sarup & Sons.
  11. "Chandraprabha Saikiani: The Legendary Crusader". 16 March 2010. http://www.assamtimes.org/node/3631/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரபிரபா_சைகியானி&oldid=3929556" இலிருந்து மீள்விக்கப்பட்டது