கிராதார்ஜுனியம்

கிராதார்ஜுனியம் (Kirātārjunīya) (சமக்கிருதம்: किरातार्जुनीय, (மலைவேடனும்), அருச்சுனனும்), கிபி ஆறாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வாழ்ந்த சமசுகிருத மொழி கவிஞர் பாரவியால் எழுதப்பட்ட சமசுகிருத மொழி காவியம் ஆகும். இக்காவியம் 18 காண்டங்கள் கொண்ட பெருங்காப்பியமாகும்.

மலைவேடன் வடிவத்தில் உள்ள சிவபெருமானுடன் போரிடும் அருச்சுனன்
வேடன் உருவில் காட்யளித்த சிவபெருமானிடம் சரணடையும் அருச்சுனன், 19ம் நூற்றாண்டின் ஓவியம் ராஜா ரவி வர்மா

காவியச் சுருக்கம் தொகு

மகாபாரத இதிகாசத்தின் வன பருவத்தில் அருச்சுனன் சிவபெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரம் எனும் தெய்வீக ஆயுதத்தைப் பெறும் நிகழ்வை [1], பாரவி 18 காண்டங்களில் கிராதார்ஜுனியம் எனும் சமசுகிருத பெருங் காவியமாக பாடியுள்ளார். கிராதார்ஜுனியம், அருச்சுனனின் வீரதீரச் செயலை வெளிப்படுத்துகிறது. [2] கிராதார்ஜுனியம், சமசுகிருத மொழியின் ஆறு பெருங்காப்பியங்களில் ஒன்றாகும். [3]

மேற்கோள்கள் தொகு

  1. அர்ஜுனனின் கடும் தவம் - வனபர்வம் பகுதி 38
  2. Amaresh Datta, ed. (2006), The Encyclopaedia Of Indian Literature Volume One (A To Devo), Sahitya Akademi, p. 462, ISBN 978-81-260-1803-1
  3. Har 1983, ப. iii

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராதார்ஜுனியம்&oldid=2425105" இலிருந்து மீள்விக்கப்பட்டது