கிராத்தி முந்தும்
கிராத்தி முந்தும் (அல்லது கிராந்தி முந்தும், கிராத்தியம், கிராந்தியம்) என்பது நேபாளம், வடகிழக்கு இந்தியா, மியன்மார் (பர்மா) ஆகிய பகுதிகளில் வாழும் கிராத்தி மக்களின் மரபார்ந்த சமயம் (மதம்). கிராத்தி மக்களில் நான்கு இன மக்கள் இருக்கினறனர். இலும்பு மக்கள், இராய் மக்கள், சுன்வார் மக்கள், யக்கா மக்கள் ஆகியவர் கிராத்தி மக்கள் ஆவர். இச்சமயத்தை இப்பொழுது சிலர் ஐக்கிய இராச்சியம், சீனா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பின்பற்றுகின்றனர். [1] இச்சமய முறைகளை கிரத்து வேதம், [2][3] அல்லது கிரத்துக்கோ வேதா'[4] அல்லது கிரத்துக்கோ வேது[5] என்று அழைக்கின்றனர். சில அறிஞர்களின் கருத்துப்படி, இச்சமயம் இயற்கை ஆன்ம வாதமும் (animism) முன்னோர் தொழுகை சமயமும், சைவ சமயமும்[6], திபெத்திய பௌத்தமும்[6] கலந்த ஒன்று[7]. இச்சமயத்தை நேபாளத்தில் 3.1% மக்கள் பின்பற்றுகின்றனர்.[8]. நேபாள மக்கள் கணக்கெடுப்பில் இதனைத் தனி சமயமாக அடையாளப்படுத்தும்முன் கிராத்தில் மக்களில் 36% பேர் கிராத்தி சமயத்தைப் பின்பற்றுவதாக அறிவித்திருந்தனர், ஆனால் தனி சமயமாக அடையாளப்படுத்தப்பட்டபின்னர் கிராத்தி மக்களில் 73.9% இச்சமயத்தைப் பின்படுத்துகின்றார்கள்.[1]
இலும்பு மக்கள் தங்களுக்கான தனி வகையான கிராத்து முந்தும் சமயம் கொண்டிருக்கின்றார்கள். இதனை இயுமா சம்யோ அல்லது இயுமாயிசம் என்கின்றனர். இதில் இவர்கள் தகெரா நிங்குவா புமா என்னும் பெண்கடவுளரைப் பெரிதும் கொண்டாடுகின்றனர்.
முந்தும்
தொகுமுந்தும் என்பது கிராத்தி மக்களின் சமயக் கோட்பாடுகளும் மரபுவழி இலக்கியமும் கொண்ட மறைநூல் அல்லது வேதநூல் ஆகும். இதனை பேலான் (Peylan) என்றும் அழைக்கின்றனர். கிராத்தி மக்காளின் நான்கு பிரிவினினரும் சற்றே வெவ்வேறான முந்தும் நூல்கள் கொண்டுள்ளனர். முந்தும் என்றால் கிராத்தி மொழியில் பெருவலிமையின் திறன் என்று பொருள் [9] கிராத்தி மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் மரபுகள் பலவும் முந்தும் மறைகளில் உள்ளன. இவை ஆரிய வேதகாலத்துக்கு முற்பட்டவை.[10][11][12][13]
ஒவ்வொரு பிரிவு மக்களுக்குமான முந்தும் அவர்களது மரபுகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், தொன்மங்கள் முதலியன வழிவழியாய் கிராத்தி மக்களிடையே பதிவு செய்து வந்துள்ளன. இவை கிராத்தி மக்களின் அன்றாட வாழ்க்கையை நெறிப்படுத்துகின்றன.[14] The Mundhum also distinguishes each Kiranti tribe from other Kiranti and non-Kirantis as well.[14]
பழக்கவழக்கங்கள்
தொகுகிராத்திகளின் வழிபாடு பெரும்பாலும் இயற்கையைத் தொழுவதே. கதிரவன், நிலா, காற்று, நெருப்பு, வீட்டின் நடுத்தூண், தம் முன்னோர்கள் முதலானவை. இராய் மக்களின் எல்லாச் சடங்குகளையும் அவர்களின் மரபுப் பூசாரியாகிய நாச்சோங்கு (nakchong) என்பவரே செய்வார். இதேபோல இலும்பு மக்களும் பெதங்குமா, யேபா, சம்பா ஆகியோர் சடங்குகளைச் செய்வார்கள்.
கிராத்திகளின் பெருங்கடவுள் யுமா என உருவகப்ப்படுத்தும் தொகர நிங்குவாப்புமா என்னும் கடவுள்.[15]
இச்சமயத்தைப் பின்பற்றுவோர் கிரந்தி வேந்தம் போன்ற சமய நூல்களை ஓதும்பொழுது இந்துக்களைப் போல் நெற்றியில் பொட்டு இட்டுக்கொள்கின்றனர். [16]
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
தொகு- ↑ 1.0 1.1 "final layout pdf.p65" (PDF). Archived from the original (PDF) on 2009-09-02. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.
- ↑ P. 56 Kiratese at a Glance By Gopal Man Tandukar
- ↑ P. xxv A Grammar of Limbu By George van Driem
- ↑ Problems of Modern Indian Literature by Statistical Pub. Society: distributor, K. P. Bagchi
- ↑ P. 323 Kiratas in Ancient India By G. P. Singh, Dhaneswar Kalita, V Sudarsen, M A Kalam
- ↑ 6.0 6.1 P. 535 Nepal By Tom Woodhatch
- ↑ "History and Culture of the Kirat" by I.S.Chemjong
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-04-18. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.
- ↑ Hardman, Charlotte E. (December 2000). John Gledhill, Barbara Bender, and Bruce Kapferer (eds.) (ed.). Other Worlds: Notions of Self and Emotion among the Lohorung Rai. Berg Publishers. pp. 104–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85973-150-5.
{{cite book}}
:|editor=
has generic name (help)CS1 maint: multiple names: editors list (link) - ↑ Dor Bahadur Bista (1991). Fatalism and Development: Nepal's Struggle for Modernization. Orient Longman. pp. 15–17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-0188-3.
- ↑ Cemjoṅga, Īmāna Siṃha (2003). History and Culture of the Kirat People. Kirat Yakthung Chumlung. pp. 2–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 99933-809-1-1.
- ↑ "Cultures & people of Darjeeling". Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.
- ↑ Gurung, Harka B. (2003). Trident and Thunderbolt: Cultural Dynamics in Nepalese Politics (PDF). Nepal: Social Science Baha. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 99933-43-44-7. இணையக் கணினி நூலக மைய எண் 57068666. Archived from the original (PDF) on 2009-09-02. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.
- ↑ 14.0 14.1 P. 65 Culture, Creation, and Procreation By Monika Böck, Aparna Rao
- ↑ P. 107 Politics of Culture:A study of three Kirata communities in the Eastern Himalayas by T.B. Subba
- ↑ P. 282 Patrika: Newsletter of the Indian Academy of Sciences By Vivekananda Kendra, Indian Academy of Sciences
வெளியிணைப்புகள்
தொகு- Mundhum Kirat Yakthung Chumlung
- Mundhum Translations பரணிடப்பட்டது 2008-04-19 at the வந்தவழி இயந்திரம்
- Dances of the Kiranti பரணிடப்பட்டது 2008-09-14 at the வந்தவழி இயந்திரம்
- Kiranti Limbus in Qatar பரணிடப்பட்டது 2008-10-19 at the வந்தவழி இயந்திரம்