கிராத் பட்டால்

இந்திய நடிகை

கிராத் பட்டால் ( Kirat Bhattal, பிறப்பு:26 சனவரி 1985) தொழில் ரீதியாக கிராத் அல்லது கீரத் என்று அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய நடிகையாவார்.[1] ஆரம்பத்தில் வடிவழகியாக அறிமுகமானார். பின்னர் தமிழ்த் திரையுலகில் நடிக்க ஆரம்பித்தார்.

கிராத் பட்டால்
பிறப்புகிராத் பட்டால்
மொன்றோவியா, லைபீரியா
மற்ற பெயர்கள்கீக்கி
கல்விலாரன்ஸ் பள்ளி, சனாவர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005–2016
வாழ்க்கைத்
துணை
கௌரவ் கபூர் (2014இல் திருமணம்)

சொந்த வாழ்க்கை

தொகு

சண்டிகரை சேர்ந்த சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.[2] லைபீரியாவிலுள்ள மொன்றோவியாவில் வளர்ந்தார். சனாவரில் உள்ள இலாரன்ஸ் பள்ளியில் தனது கல்வியை முடித்தார்.[3]

தொழில்

தொகு

நடிகர் தனுஷுடன் "தேசிய நெடுஞ்சாலை 47" என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அந்தத் திட்டம் தாமதமாகி பின்னர் ரத்து செய்யப்பட்டது. பின்னர் பிரஜ்வல் தேவராஜுக்கு இணையாக கெளயா என்ற கன்னட மொழித் திரைப்படத்தில் பட்டால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜெனிலியா மற்றும் ஜெயம் ரவி நடித்த பொமரில்லு என்ற தெலுங்கு படத்தின் மறு ஆக்கமான சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். நடிகை பார்பரா மோரி, தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனா விஜயா, விளம்பர நடிகை டியாண்ட்ரா சோரஸ் மற்றும் யானா குப்தா ஆகியோருடன் லைஃப் மே ஏக் பார்-வென் ஏஞ்சல்ஸ் டேர் என்ற பயண நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். பாக்சு லைப்பு இந்தியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்டைல் அண்ட் தி சிட்டியின் இரண்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். தற்போது நேஷனல் ஜியாகிரபிக்கில் நாட் ஜியோ கவர்சாட்: ஹெரிடேஜ் சிட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Pillai, Sreedhar (7 October 2006). "Arya, a gun-runner". தி இந்து இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201012040442/https://www.thehindu.com/archive/print/2006/10/07/. பார்த்த நாள்: 21 February 2012. 
  2. "The kudis of Punjab flock South - Times of India". Archived from the original on 7 July 2015. பார்க்கப்பட்ட நாள் 9 August 2015.
  3. Priya Gill, Who's Who பரணிடப்பட்டது 12 அக்டோபர் 2020 at the வந்தவழி இயந்திரம் dated 6 July 2009, at indiatoday.intoday.in, accessed 13 March 2012

4. ^ Neeti Sarkar, Five on a high. Dated 17 March 2013 at தி இந்து http://www.thehindu.com/features/metroplus/radio-and-tv/five-on-a-high/article4518895.ece http://www.indiainfoline.com/Markets/News/FOX-Traveller-launches-new-season-of-most-successful-show-Style-and-the-City/5903582916

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராத்_பட்டால்&oldid=4098741" இலிருந்து மீள்விக்கப்பட்டது