கிராந்தி ரெட்கர்

இந்திய நடிகை

கிராந்தி ரெட்கர்-வான்கடே (Kranti Redkar ; பிறப்பு 17 ஆகத்து 1982) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை, இயக்குநர், எழுத்தாளர் ஆவார். இவர் முதன்மையாக மராத்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

கிராந்தி ரெட்கர்-வான்கடே
2013 இல் கிராந்தி ரெட்கர்
பிறப்பு17 சூலை 1982 (1982-07-17) (அகவை 42)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணி
  • நடிகை
  • திரைப்பட படைப்பாளி
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது
வாழ்க்கைத்
துணை
சமீர் வான்கடேகர் (தி. 2017)
பிள்ளைகள்2

2000 ஆம் ஆண்டில் சூன் அசாவி ஆஷி என்ற திரைப்படத்தில் அறிமுகமான பிறகு, பெரு வெற்றிபெற்ற படமான ஜாத்ரா: ஹயலகாட் ரே தைலகாட் (2005) படத்தில் இடம்பெற்ற 'கொம்பாடி பலாலி' என்ற பாடலில் இடம்பெற்றதற்காக இவர் பகுழ்பெற்றார். மஜா நவ்ரா துஜி பேகோ (2006), சக்கா சவத்ரா (2008), சிக்சனாச்சியா ஆயிச்சா கோ (2010), ஆன் டூட்டி 24 தாஸ் (2010) ஆகிய நகைச்சுவை நாடகப் படங்களில் நடித்து இவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் அமெரிக்க திரைப்படமான தி லெட்டர்ஸ் (2014) படத்திலும் பணியாற்றியுள்ளார். மேலும் காதல் நாடகப் படமான டீன் பேய்கா ஃபாஜிதி ஐகா (2012), நோ என்ட்ரி: புதே தோகா ஆஹே (2012), நகைச்சுவைப் படமான கோ-கோ (2013), நாடகப் படமான சுகர் சால்ட் அனி பிரேம் (2015), நகைச்சுவை மரும்ப் படமான மர்டர் மேஸ்திரி (2015) ஆகிய படங்களில் இவரது நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றன.

கிராந்தி ரெட்கர் காக்கன் 2015 படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். இதற்காக நாசிக் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார். அடுத்து இவர் மோசடி செய்பவர்களைச் சித்தரித்து எடுக்கபட்ட கிரண் குல்கர்னி விசஸ் கிரண் குல்கர்னி (2016) படத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார். பின்னர் காரார் (2017) படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக மராத்தி 4வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான பரிந்துரையைப் பெற்றார். இவர் தனது சொந்த ஆடை பிராண்டான ஜியாஜிடாவை 2019 இல் அறிமுகப்படுத்தினார்.[சான்று தேவை][மேற்கோள் தேவை]

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

கிராந்தி ரெட்கர் 1982 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 17 அன்று இந்தியாவின், மகாராட்டிரத்தின், மும்பையில் தினநாத்துக்கும் ஊர்மிளா செஞ்சதுக்கும் மகளாக ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு இருதயா பானர்ஜி மற்றும் சஞ்சனா வவ்கல் என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். கிராந்தி ரெட்கர் தனது துவக்கக் கல்வியை பாந்த்ராவில் உள்ள கார்டினல் கிரேசியாஸ் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பின்னர் தனது பட்டப்படிப்பை ராம்நரைன் ரூயா கல்லூரியில் முடித்தார்.[சான்று தேவை][மேற்கோள் தேவை]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

கிராந்தி ரெட்காரும் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (NCB) மண்டல இயக்குநரான சமீர் வான்கடேகரும் ராம்நரேன் ரூயா கல்லூரியில் வகுப்புத் தோழர்களாக இருந்தனர், 17 வயதிலிருந்தே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர்.[1] பட்டம் பெற்ற பிறகு அவர்களுக்கிடையில் தொடர்பு ஏதும் இருக்கவில்லை. ஆனால் 2010 ஆம் ஆண்டில், கிராந்தி ரெட்கர் ஒரு விருது நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பி வருகையில் வானூர்தி நிலையத்தில் பணியில் இருந்த வான்கடேரை மீண்டும் தற்செயலாக சந்தித்தார்.[2] பின்னர் அவர்கள் சில ஆண்டுகள் நன்கு பழகத் தொடங்கினர். இறுதியில் 2017 மார்ச் 29 அன்று, அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.[3] ஒரு ஆண்டு கழித்து, 2018 திசம்பர் 3 அன்று, மும்பையில் உள்ள சூர்யா மருத்துவமனையில் ஜியா, ஜியாடா என்ற இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தனர்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "क्रांती रेडकर आणि समीर वानखेडे महाविद्यालयात होते एकत्र, पाहा १९९७ ते लग्नापर्यंतचे Unseen फोटो". Loksatta (in மராத்தி). 2023-08-16. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  2. "वयाच्या १७ व्या वर्षापासून एकत्र, समीर वानखेडेला अशी लाभली क्रांती रेडकरची साथ". Maharashtra Times (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  3. "पहिल्यांदाच एकत्र दिसले क्रांती आणि समीर वानखेडे; हा व्हिडिओ एकदा पाहाच". Maharashtra Times (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  4. टीम, एबीपी माझा वेब (2018-12-06). "अभिनेत्री क्रांती रेडकरला जुळ्या मुली". marathi.abplive.com (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  5. "Latest Marathi News- Breaking News Today | Read Marathi Batmya from Maharashtra, India ब्रेकींग मराठी न्यूज". Loksatta (in மராத்தி). 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராந்தி_ரெட்கர்&oldid=4114747" இலிருந்து மீள்விக்கப்பட்டது