கிரா இலால் (பிறப்பு 16 ஏப்ரல் 1966) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இமாச்சலப் பிரதேச கர்சொக் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் 2017ஆம் ஆண்டு இமாச்சலப்பிரதேச மாநிலச் சட்டசபைத் தேர்தலில் கர்சோக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டா. இது இவரது இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் காலம் ஆகும்.

கிரா இலால்
சட்டமன்ற உறுப்பினர், இமாச்சலப்பிராதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2017
முன்னையவர்மன்சா இராம்
தொகுதிகர்சோக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 ஏப்ரல் 1966 (1966-04-16) (அகவை 58)[1]
லாலாக், மண்டி, இமாச்சலப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

கிரா இலால் 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லாலாக், கர்சோக், மண்டியில் சுர்ஜு ராமுக்கு மகனாகப் பிறந்தார்.

இவர் 12வது வரை மேல்நிலைப் பள்ளிக் கல்வியினைப் பயின்றுள்ளார்.[1]

அரசியல்

தொகு

கிரா இலால் 1996 முதல் உள்ளூர் அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் மாநில அரசியலில் 2007 முதல் பணியாற்றி வருகின்றார்.

முன்னதாக இவர் 2007-ல் இமாச்சலப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2017-ல் இவர் பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து, திசம்பர், 2017-ல் நடைபெற்ற பதின்மூன்றாவது இமாச்சலப்பிரதேச சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கர்சொக் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Details of MLA Hira Lal". hpvidhansabha.nic.in.
  2. "Pdf ― list of Himachal Pradesh 2017 Legislative election winning candidates". Election Commission of India.
  3. "Hira Lal won from Karsog constituency in Himachal Pradesh Assembly election 2017-full list winners". The Indian Express. https://indianexpress.com/elections/himachal-pradesh-assembly-elections-2017/himachal-pradesh-election-2017-full-list-of-winners-live-updates-4988241/. 
  4. "Hira Lal won from Karsog constituency in 2017 HP Legislative elections". NDTV. https://www.ndtv.com/elections/himachal-pradesh/karsog-mla-results. 
  5. "bjp's Hira Lal won from Karsog constituency in 2017 state assembly elections". Aaj Tak. https://www.aajtak.in/elections/himachal-pradesh-assembly-election-2017/story/karsog-election-result-himachal-pradesh-assembly-election-2017-476917-2017-12-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரா_இலால்&oldid=3669831" இலிருந்து மீள்விக்கப்பட்டது