கிரிகோரைட்டு

கிரிகோரைட்டு (Gregoryite) என்பது பொட்டாசியம் மற்றும் சோடியம் அதிக அளவில் காணப்படக்கூடிய நீரற்ற கார்பனேட்டு கனிமம் ஆகும்.[4] இதன் வேதி வாய்ப்பாடு (Na2,K2,Ca)CO3 ஆகும்.[1][5][6] இது இயற்கையில் ஓல் டோய்னியோ லெங்கை எரிமலைக் குழம்பில் காணப்படும் நேட்ரோகார்பனாடைட்டில் காணப்படும் இரு முக்கியக் கூறுகளில் ஒன்றாகும். அந்த மற்றொரு கனிமம் நையிரெரெய்ட்டே ஆகும். [7]

கிரிகோரைட்டு
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(Na2,K2,Ca)CO3
இனங்காணல்
நிறம்பழுப்பு, பால் நிற வெண்மை
படிக இயல்புலாவா கார்போனடைட்டின் பெருமப்பரல்கள்
படிக அமைப்புஅறுமுகப் படிக வடிவம்
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளி ஊடுருவக்கூடியதிலிருந்து அரைகுறையாக ஒளி ஊடுருவும் தன்மை வரை
ஒப்படர்த்தி2.27 (கணக்கிடப்பட்டது)
ஒளியியல் பண்புகள்ஓரச்சு
கரைதிறன்நீரில் கரையக்கூடியது
மேற்கோள்கள்[1][2][3]

இதன் நீரற்ற தன்மையின் காரணமாக, கிரிகோரைட்டு சுற்றுப்புறத்துடன் விரைந்து வினைப்பட்டு மிக அடர் தன்மையுள்ள கற்குழம்பாக மாறி பின்னர் சில மணி நேரங்களிலேயே ஒரு வெண்ணிறத் திண்மமாக மாறுகிறது.[4]

கிரிகோரைட்டானது 1980 ஆம் ஆண்டில் முதன்முதலாக பிரித்தானிய மண்ணியலாளர் மற்றும் எழுத்தாளர் ஜான் வால்டர் கிரெகோரியால் (1864–1932) கிழக்கு ஆப்பிரிக்க ரிஃப்ட்டு பள்ளத்தாக்கில் ஆய்வு மேற்கொண்ட போது குறிப்பிடப்பட்டது.[1][2] இது நையிரெரெய்ட்டே, அலபன்டைட்டு, பாறை உப்பு, சில்வைட்டு, புளோரைட்டு மற்றும் கால்சைட்டு ஆகியவற்றுடன் சேர்ந்தே காணப்படுகிறது.[3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் கிரிகோரைட்டு கனிமத்தை Ggy[8] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Mindat.org
  2. 2.0 2.1 Webmineral.com
  3. 3.0 3.1 "Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2019-05-08. பார்க்கப்பட்ட நாள் 2022-08-30.
  4. 4.0 4.1 "Gregoryite definition". Dictionary of Geology. பார்க்கப்பட்ட நாள் 2011-05-21.
  5. Mitchell, Roger H.; Bruce A. Kjarsgaard (2010). "Experimental Studies of the System Na2CO3–CaCO3–MgF2 at 0·1 GPa: Implications for the Differentiation and Low-temperature Crystallization of Natrocarbonatite". Journal of Petrology (Oxford Journals) 52 (7–8): 1265–1280. doi:10.1093/petrology/egq069. 
  6. Hay, Richard L (1989). "Holocene carbonatite-nephelinite tephra deposits of Oldoinyo Lengai, Tanzania". Journal of Volcanology and Geothermal Research (Elsevier (Netherlands)) 37 (1): 77–91. doi:10.1016/0377-0273(89)90114-5. Bibcode: 1989JVGR...37...77H. https://archive.org/details/sim_journal-of-volcanology-and-geothermal-research_1989-03_37_1/page/77. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "World's Coolest Lava is in Africa". Volcano Watch. USGS Hawaiian Volcano Watch. பார்க்கப்பட்ட நாள் 2011-05-21.
  8. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிகோரைட்டு&oldid=4093347" இலிருந்து மீள்விக்கப்பட்டது