கிரிஷ் யாதவ்

இந்திய அரசியல்வாதி

கிரிஷ் யாதவ் (Girish Yadav)(பிறப்பு அக்டோபர் 1, 1974) என்பவர் உத்தரப்பிரதேச மாநில அமைச்சராக (சுதந்திர பொறுப்பு) பணியாற்றும் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் ஜவுன்பூர் மாவட்டத்தில் உள்ள சமஸ்பூரில், பணியாரியாவில் பிறந்தார்.[2] யாதவ் 1990-ல் சஞ்சு யாதவினை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.[2]

கிரிஷ் யாதவ்
गिरिश चंद्र यादव
வீட்டுவசதி, நகர்புற அமைச்சர், உத்தரப்பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2022
முதலமைச்சர்யோகி ஆதித்தியநாத்
உறுப்பினர், உத்தரப்பிரதேச சட்டமன்றம்
பதவியில்
2017–2022
தொகுதிஜவுன்பூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 நவம்பர் 1974 (1974-11-01) (அகவை 49) சமாசுபூர், பஜாரியா, ஜவுன்பூர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சஞ்சு யாதவ்
பிள்ளைகள்3

யாதவ் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் மற்றும் உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் தற்போதைய உறுப்பினராவார்.[3] விவசாய தொழில் ஈடுபட்டுவரும் யாதவ் சமூக சேவையில் சிறப்பு ஆர்வம் கொண்டவர்.[2] இவர் மூன்று இளநிலை பட்டங்களை அறிவியல், கல்வி, சட்டம் என மூன்று துறைகளில் பெற்றுள்ளார்.[2]

அரசியல் தொகு

கிரிஷ் சந்திர யாதவ் மார்ச் 2017-ல் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார்.[4] இவர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் துறையின் தற்போதைய அமைச்சராக பணியாற்றுகிறார்.[1]

சமூக ஊடகம் தொகு

கிரிஷ் சந்திர யாதவ் டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களைத் தீவிரமாகப் பயன்படுத்துபவர் ஆவார். இதில் இவருக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.[5] இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ட்வீட்களை எழுதியுள்ளார்.

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Uttar Pradesh Chief Minister Office Lucknow". upcmo.up.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-10-11.
  2. 2.0 2.1 2.2 2.3 "Uttar Pradesh Legislative Assembly (UPLA): Member info". upvidhansabhaproceedings.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-10-11.
  3. "Members of Uttar Pradesh Legislative Assembly". uplegisassembly.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-10-11.
  4. "CM Yogi Adityanath keeps home, revenue: UP portfolio allocation highlights", ஹிந்துஸ்தான் டைம்ஸ், 22 March 2017
  5. "https://twitter.com/girishyadavbjp". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-11. {{cite web}}: External link in |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஷ்_யாதவ்&oldid=3742822" இலிருந்து மீள்விக்கப்பட்டது