ஜவுன்பூர் மாவட்டம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

ஜவுன்பூர் மாவட்டம் இந்திஹ்ய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. இதன் தலைமையகம் ஜவுன்பூர் நகரில் அமைந்துள்ளது. இது வாராணசி கோட்டத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. இதன் பரப்பளவு 4038 சதுர கி.மீ.

ஜவுன்பூர் மாவட்டம்
जौनपुर ज़िला
جون پور ضلع
ஜவுன்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்வாரணாசி கோட்டம்
தலைமையகம்ஜவுன்பூர்
பரப்பு4,038 km2 (1,559 sq mi)
மக்கட்தொகை4,476,072 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,108/km2 (2,870/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை333,649
படிப்பறிவு73.66%
பாலின விகிதம்1018
வட்டங்கள்பத்லாபூர், ஷாகஞ்சு, மச்சாலி ஷாகர், ஜவுன்பூர், மரியாஃகு, கேராகத்
மக்களவைத்தொகுதிகள்ஜவுன்பூர், மச்சிலிஷாகர்
சராசரி ஆண்டு மழைபொழிவு987 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பொருளாதாரம்

தொகு

இந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் உழவுத் தொழில் பெரும்பங்கு கொண்டுள்ளது. இந்த மாவட்டம் இந்தியாவில் உள்ள வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியைப் பெறுகிறது. [1] அரசி, சோளம், உளுந்து ஆகியவை விளைகின்றன. இங்கு தொழிற்சாலைகள் ஏதுமில்லை.

மக்கள்

தொகு

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 4,476,072 மக்கள் வாழ்ந்தனர். 73.66 சதவிகிதம் பேர் கல்வி கற்றிருந்தனர். பால் விகிதக் கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 1018 பெண்கள் இருப்பது தெரிய வந்தது. [2]

ஆட்சிப் பிரிவுகள்

தொகு

இது மூன்று மக்களவைத் தொகுதிகளைக் கொண்டது. ஜவுன்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் இந்த மாவட்ட எல்லைக்கு உட்பட்டிருக்கின்றன. பிற இரண்டு தொகுதிகளில் பிற மாவட்டங்களில் அமைந்துள்ளன. பத்து சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டது. கீழ்க்கண்ட ஆறு வட்டங்களைக் கொண்டது.

  • ஷாகஞ்சு
  • பத்லாபூர்
  • மச்சாலி ஷாகர்
  • ஜவுன்பூர்
  • மரியாஃகு
  • கேராகத்

சான்றுகள்

தொகு
  1. Ministry of Panchayati Raj "A note on the Backward Regions Grant Fund Programme." பரணிடப்பட்டது 2012-04-05 at the வந்தவழி இயந்திரம் National Institute of Rural Development. 8 September 2009. Accessed 27 September 2011.
  2. Jain H. K. "Census 2011." Website accessed 4 December 2013.

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவுன்பூர்_மாவட்டம்&oldid=3536646" இலிருந்து மீள்விக்கப்பட்டது