கிருட்டிண கோவிந்த குப்தா
சர் கிருட்டிண கோவிந்த குப்தா (Sir Krishna Govinda Gupta) (1851 பிப்ரவரி 28 - 1926 மார்ச் 20) |
IMAGE
இவர் குறிப்பிடத்தக்க இந்திய அரசு ஊழியரும், [1] இந்திய ஆட்சிப்பணியில் இருந்த ஆறாவது இந்தியருமாவார். [2] பாரிஸ்டரான இவர் 19 ஆம் நூற்றாண்டின் ஒரு முக்கிய வங்காள சமூக சீர்திருத்தவாதியாகவும் மற்றும் முன்னணி பிரம்ம சமாஜத்தின் ஆளுமையாகவும் திகழ்ந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுகிருட்டிண கோவிந்த குப்தா தற்போது வங்காளதேசத்தில் அமைந்துள்ள டாக்காவுக்கு அருகில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் சதார் காவல் நிலையத்தில் உள்ள பட்பாரா கிராமத்தில் உள்ள பைத்ய பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை காளிநாராயண குப்தா, பட்பாராவின் நில உரிமையாளரும், பிராமண ஆதிக்கம் செலுத்திய சமுதாயத்தில் ஒரு சிறந்த நபராகவும் இருந்தார். [3] இவரது தாய் மகதேவ சந்திர செனின் மகள் அன்னதா சுந்தரி குப்தா ஆவார்.
இவரது ஆரம்பக் கல்வி மைமன்சிங் அரசுப் பள்ளி மற்றும் டாக்கா கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், இவர் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு இவர் இந்திய ஆட்சிப் பணியில் ஆறாவது இந்திய உறுப்பினரானார். 1871இல் ஒரு தகுதிகாண் பணியில் சேர்ந்தார். 1873இல் இந்தியாவுக்குத் திரும்பினார்.
இலக்கிய நடவடிக்கைகள்
தொகு1963ஆம் ஆண்டின் இந்திய ஆட்சிப்பணியிலிருந்த சத்யேந்திரநாத் தாகூர் (1842-1923), கிருட்டிண கோவிந்த குப்தாவின் சமூக இலக்கிய நடவடிக்கைகளில் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். அப்போதைய வங்காளத்தின்புகழ்பெற்ற தலைவர்களான தாரக்நாத் பாலித், மன்மோகன் கோசு, சத்யேந்திர பிரசன்னா சின்கா, பிகாரி லால் குப்தா மற்றும் கிருஷ்ணா கோவிந்த குப்தா ஆகியோர் கொல்கத்தாவின் பூங்கா தெருவிலுள்ள சத்யேந்திரநாத் வீட்டில் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படும் இலக்கிய கலந்துரையாடல்களில் தவறாமல் பங்கேற்றனர்
குடும்பம்
தொகுகிருட்டிண கோவிந்த குப்தா, நபின் சந்திர தாசு என்பவரின் மகள் பிரசன்னா தாரா குப்தாவை மணந்தார். ஜதிந்திர சந்திர குப்தா, ஹேம குசூம் சென், அதுல் பிரசாத் சென், சரஜு சென், இலா குப்தா மற்றும் நிலினி குப்தா என்ற குழந்தைகள் இருந்தனர். இவரது மகள் ஹேமா குசூம் கல்வியாளரான அதுல் பிரசாத் சென் என்பவரை மணந்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ Maheswari, S. R. (1998). Administrative Thinkers. Macmillan Publishers India Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1403-90949-7.
- ↑ India in Britain - South Asian Networks and Connections, 1858 - 1950. Palgrave Macmillan. 2013. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-023-039-271-7.
- ↑ "প্রতিষ্ঠানের তথ্য". pskgghs.edu.bd. Archived from the original on 2016-09-26. பார்க்கப்பட்ட நாள் 2017-08-29.