தாரக்நாத் பாலித்

சர் தாரக்நாத் பாலித் (Sir Taraknath Palit) (1831 – 1914) இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய வழக்கறிஞராகவும், தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவும் இருந்தார். [1] மேலும், பிரிவினையின் போது சுதேசி இயக்கத்துடன் தொடர்பிலிருந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவை நிறுவப்பட்டதன் பின்னணியில் இருந்த முக்கிய நபர்களில் இவரும் ஒருவராவார்.

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

தாரக்நாத் 1831ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் செல்வந்தரான காளிசங்கர் பாலித்தின் ஒரே மகனாகப் பிறந்தார். இவர் மேற்கு வங்காளத்தின் ஹூக்லி மாவட்டத்தின் அமர்பூரில் வளர்க்கப்பட்டார். [2]

கல்விதொகு

தாரக்நாத் கொல்கத்தாவின் இந்துப் பள்ளியில் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் இவர் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்றார். [2] இவர் இங்கிலாந்தில் தங்கியிருந்தபோது, முதல் அசாமி பட்டதாரியும் மற்றும் இந்திய ஆட்சிப்பணியாளருமான அனுந்தராம் போராவுடன் தொடர்பிலிருந்தார்.

தொழில்தொகு

1871ஆம் ஆண்டில், தாரக்நாத் இந்தியாவுக்குத் திரும்பி ஒரு சட்டப் பயிற்சியை மேற்கொண்டார். [2]

தொண்டு நடவடிக்கைகள்தொகு

இந்தியாவின் தேசிய கல்வி அமைப்பி நிறுவுவதில் தாரக்நாத் பாலித் முக்கிய பங்கு வகித்தார். "தேசியவாதம் மற்றும் தேசிய வளர்ச்சியின் உறுதியான ஆதரவாளரான இவர் கல்வியை தேசியமயமாக்க முயன்றார்." [2] மகாராஜா மணீந்திர சந்திர நந்தி, பூபேந்திர நாத் போசு, நில்ரதன் சிர்கார் மற்றும் ராஜ்பிகாரி கோசு ஆகியோருடன் இணைந்து சுதேசி இயக்கம் உச்சத்தில் இருக்கும்போது வங்காள தொழில்நுட்ப நிறுவனம் நிறுவப்பட்டதன் பின்னணியில் இருந்த முக்கிய நபர்களில் ஒருவராக இவர் இருந்தார். வங்காள தொழில்நுட்ப நிறுவனம்1906 சூலை 25 அன்று நிறுவப்பட்டது இது ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் நேரடி முன்னோடியாகும்.

1912 சூன் மற்றும் அக்டோபர் மாதங்களில், கொல்கத்தா பல்கலைக்கழகத்திற்காக ரூ .1.5 மில்லியன் நன்கொடை அளித்தார். [3][nb 1] இவரது நன்கொடைகள் 1914 மார்ச் 27 அன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரியை உருவாக்க உதவியது.[4][nb 2]

1913 சனவரி 1 அன்று இவருக்கு பிரிட்டிசு அரசாங்கத்திடமிருந்து நைட் பட்டம் வழங்கப்பட்டது. [5]

இறப்புதொகு

இவர் 1914 அக்டோபர் 3, அன்று இறந்தார். [2] [6]

குறிப்புகள்தொகு

  1. The law department building is now on the land donated by Taraknath Palit.[1]
  2. Along with Sir Rashbihari Ghosh, their cumulitive donation of nearly thirty seven and half lakhs of rupees formed the corpus for the creation of University College of Science and Technology. It is presently located at "Rashbehari Siksha Prangan" at 92, Acharya Prafulla Chandra Road, Kolkata and "Taraknath Palit Siksha Prangan" at 35, Ballygunge Circular Road, Kolkata.[4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரக்நாத்_பாலித்&oldid=2989704" இருந்து மீள்விக்கப்பட்டது