கிருஷ்ணம்பள்ளி
கிருஷ்ணம்பள்ளி (Krishnampalli) இந்தியாவின் தெற்கு மாநிலமான தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில், குடியாத்தம் தாலுகா, மேல்பட்டி அஞ்சலின் கீழ் உள்ள ஒரு கிராமமாகும். இந்த கிராமம் பேர்ணாம்பட்டிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் மேல்பட்டி வழியாக அமைந்துள்ளது.
கிருஷ்ணம்பள்ளி | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | வேலூர் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எ | 635805 |
தொலைபேசிக் குறியீடு | 04171- |
வாகனப் பதிவு | TN-23 |
அருகில் உள்ள நகரம் | வேலூர் / குடியாத்தம் |
மக்களவைத் தொகுதி | வேலூர் |
தட்பவெட்பநிலை | வெப்பம் (கோப்பென்) |
இந்த கிராமத்தில் அதிகம் பேசப்படும் மொழி தெலுங்காகவும் இரண்டாவதாக அதிகம் பேசப்படும் மொழியாக தமிழும் உள்ளன.
கிராமத்தில் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது 1987-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இக்கிராமத்தில் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோயில் ஒன்று உள்ளது.
இக் கிராமமானது சில சிறிய மலைகளாலும், கிராமங்களாலும் சூழப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் வறட்சி காணப்பட்டாலும், இதன் முக்கிய வருவாய் ஆதாரம் விவசாயம் ஆகும். தற்போதைய தலைமுறையில் எழுத்தறிவு விகிதம் 90% க்கு மேல் உள்ளது.