கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.