கிருஷ்ணவேணி (நடிகை)

இந்திய நடிகை

சித்தஜல்லு கிருஷ்ணவேணி (பிறப்பு 24 டிசம்பர் 1924), பெரும்பாலும் சி. கிருஷ்ணவேணி அல்லது கிருஷ்ணவேணி என்று அழைக்கப்படும் இவர், இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு மொழி திரைப்பட நடிகையும் தயாரிப்பாளரும், பின்னணிப் பாடகியும், வணிக நிர்வாகியுமாவார்.[1]

கிருஷ்ணவேணி (நடிகை)
பிறப்புசித்தஜல்லு கிருஷ்ணவேணி
24 டிசம்பர் 1924
பங்கிடி, மேற்கு கோதாவரி மாவட்டம் , ஆந்திரப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
பணிநடிகை, பாடகி, தயாரிப்பாளர்
வாழ்க்கைத்
துணை
மேகா வெங்கட்ராமையா அப்பா ராவ் பகதூர் (மிர்சாபுரம் ஜமீன்தார்)

வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பங்கிடி பகுதியில் பிறந்தவர் கிருஷ்ணவேணி. திரையுலகில் நுழைவதற்கு முன்பு நாடகக் கலைஞராக இருந்த இவர், அனசூயா (1936) என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் அறிமுகமானார். இவரது தந்தை கிருஷ்ணராவ் ஒரு மருத்துவர் என்பதாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க அவருக்கு பல வாய்ப்புகள் வந்ததாலும், 1939 ஆம் ஆண்டில் சென்னைக்கு குடிபெயர்ந்து, தெலுங்கு படங்களைத் தவிர தமிழ் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார்.

1939 ஆம் ஆண்டில் மிர்சாபுரம் ஜமீன்தாரான மேகா வெங்கட்ராமையா அப்பா ராவ் பகதூரை மணந்துள்ளார். இவரது கணவருக்கு சொந்தமான சென்னையில் இயங்கி வந்த சோபனாசல பட நிறுவனம், அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமானதாகவும், பல்வேறு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்து வெளியிடும் வந்துள்ளது. இவரும், இவரது கணவரோடு இணைந்து இந்நிறுவனத்தின் மூலம் திரைப்படத் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

கிருஷ்ணவேணி, தெலுங்குத் திரைப்படமான மன தேசம் (1949) என்பதன் தயாரிப்பாளராக நடிகராக என்.டி.ராமராவ், இசையமைப்பாளராக கன்டாசல வெங்கடேஸ்வர ராவ், பின்னணிப் பாடகியாக பி லீலா போன்ற பல திரையுலகப் பிரமுகர்களை அப்படத்தில் அறிமுகப்படுத்தியதற்காக நினைவுகூரப்பட்டு வருகிறார். இத்திரைப்படம் பெங்காலி நாவலான விப்ரதாஸ் என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும்.[2]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

தொகு

தயாரிப்பாளர்

தொகு

கிருஷ்ணவேணியால் நிர்வகிக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள்

தொகு
  • அவரது கணவரின் நிறுவனம் – ஜெயா படத்தயாரிப்பு , பின்னர் சோபனாசல படத்தயாரிப்பு என்று பெயர் மாற்றப்பட்டது.
  • அவரது சொந்த நிறுவனம் – இவரது மகளின் பெயரான மேகா ராஜ்யலட்சுமி அனுராதா என்பதை முதலெழுத்தாக கொண்ட எம்ஆர்ஏ தயாரிப்பு நிறுவனம்

கிருஷ்ணவேணி தயாரித்த திரைப்படங்கள்

தொகு
  • மன தேசம் (1949)
  • லக்ஷ்மம்மா
  • தாம்பத்யம் ,
  • பக்த பிரஹலாதன்

குறிப்பு: பட்டியல்கள் விரிவானவை அல்ல.

பாடகர்

தொகு
  • கீலு குர்ரம் (1949)
  • பாலா மித்ருலா கதா (1972)

மேற்கோள்கள்

தொகு
  1. "Hollywood Singers: C. Krishnaveni profile". Archived from the original on 2023-03-07. பார்க்கப்பட்ட நாள் 2023-03-22.
  2. Kampella, Ravichandran (2005). Gnapakalu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணவேணி_(நடிகை)&oldid=4114851" இலிருந்து மீள்விக்கப்பட்டது