கிருஷ்ணா உதயசங்கர்

தமிழ் எழுத்தாளர்

கிருஷ்ணா உதயசங்கர் (Krishna Udayasankar) என்பவர் சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் மகாபாரதத்தை பின்னணியாகக் கொண்டு, நவீன முறையில் எழுதிய புதினங்களான "கோவிந்தா", "கௌரவா" மற்றும் "குருஷேத்ரா" போன்றவற்றின் மூலம் அறியப்படுகிறார். இந்த மூன்று புத்தகங்களையும் " த ஆரியவர்த்த குரோனிக்கிள்" என்ற இணையதளம் வெளியிட்டது.[1] இவரின் முதல் புதினம் "கோவிந்தா" அதிகளவில் விற்பனையானது. இது மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. மகாபாரதம் ஒரு பெருங்கடல்,[சான்று தேவை] அது எப்போதும் விரிவடைந்து கொண்டிருக்கிறது, கிருஷ்ண உதயசங்கர் இந்த கதையின் சிக்கலான தன்மையை எடுத்துக்கொண்டு அதற்கு பெருமை சேர்த்தார். மேலும் சிங்கப்பூரைச் சுற்றியுள்ள தொன்மங்கள் மற்றும் புராணங்களை அடிப்படையாகக் கொண்ட " 3" என்ற புதினத்தை எழுதியவர். அவரது சமீபத்திய புத்தகம் "இம்மார்டல்" ஒரு நவீன கால கற்பனை மற்றும் சாகச புதினம், இது அமெரிக்க கடவுள்களின் ஒரு பகுதியாகவும், இந்தியானா ஜோன்ஸின் ஒரு பகுதியாகும் உள்ளது [2]

கிருஷ்ணா உதயசங்கர்
இயற்பெயர்
கிருஷ்ணா உதயசங்கர்
பிறப்புபெங்களூர், இந்தியா
தொழில்விரிவுரையாளர், எழுத்தாளர்
மொழிஆங்கிலம்
தேசியம்இந்தியன்
குடியுரிமைசிங்கப்பூர்
கல்வி நிலையம்நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்திய பல்கலைக்கழகம், பெங்களூர்
வகைகற்பனைக் கதைகள், வரலாற்றுப் புனைவு, கவிதை
செயற்பட்ட ஆண்டுகள்2012-தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்கோவிந்தா, குருஷேத்ரா, 3
இணையதளம்
Krishna Udayasankar

சொந்த வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

கிருஷ்ணா உதயசங்கர், பெங்களூரில் உள்ள ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். குழந்தை பருவத்தில் அவர் இந்தியா முழுவதும் பல நகரங்களில் மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு கண்டங்களில் வாழ்ந்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்திய பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சிங்கப்பூரில் உள்ள "நன்யங் பிஸினஸ் ஸ்கூலில்" மூலோபாய மேலாண்மையில் டாக்டர் பட்டம் பெற்றார். தற்போது அதே இடத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். மேலும் அவர் ஒரு சர்வதேச வர்த்தக பாடநூல் இணை ஆசிரியர் ஆவார்[3] இவர் சிங்கப்பூரில் தன் கணவர் மற்றும் இரண்டு வளர்ப்பு நாய்களுடன் வசித்து வருகிறார்.[4]

எழுதிய புத்தகங்கள் தொகு

  • கோவிந்தா (புதினம்) (ஹசெட் இந்தியா, 2012)
  • ஆப்ஜெக்ட்ஸ் ஆஃப் அஃபெக்சன் (கவிதை) (மாத் பேப்பர் பிரஸ், 2013)
  • பாடி பவுண்டரிஸ்: த எதிக் ஆந்த்தோலஜி ஆஃப் விமன்ஸ் ரைட்டிங்" (த லிட்டரரி சென்டர்,2013)
  • கௌரவா (புதினம்) (ஹசெட் இந்தியா, 2013)
  • குருஷேத்ரா (புதினம்) (ஹசெட் இந்தியா, 2014)
  • 3 (புதினம்) (ஹசெட், 2015)
  • இம்மார்ட்டல் (ஹசெட் இந்தியா, 2016)
  • புத்தா (பெங்குயின் இந்தியா, டி.பி.ஏ.)[5]-

மேற்கோள்கள் தொகு

  1. Udayasankar, Krishna. "The Books". Aryavarta Chronicles. Hachette India. பார்க்கப்பட்ட நாள் 9 August 2016.
  2. .https://in.bookmyshow.com/person/krishna-udayasankar/1079934
  3. "Academic Profile - Krishna Udayasankar". Nanyang Business School. Archived from the original on 25 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Deshpande, Nikita. "Udayasankar". Hachette India. Archived from the original on 19 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Shetty, Deepika. "Penguin signs Singapore based author". Strait Times. பார்க்கப்பட்ட நாள் 9 August 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணா_உதயசங்கர்&oldid=3581197" இலிருந்து மீள்விக்கப்பட்டது