கிரேசு ஆலோக்கு

அமெரிக்க சிறார் இலக்கிய எழுத்தாளர்

கிரேசு டேபர் ஆலோக்கு (Grace Taber Hallock) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி ராபின் டபிள்யூ. ஆலோக்கு மற்றும் இசபெல் டேபர் ஆலோக்கு தம்பதியருக்கு மகனாக ஒரு பண்ணையில் பிறந்தார். வாழ்நாள் முழுவதும் அங்கேயே வாழ்ந்தார். 1914 ஆம் ஆண்டு மவுண்ட் ஓலியோக்கு கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் நியூயார்க்கின் உல்சுடர் மாகாணத்தின் வாக்குரிமை அமைப்பை ஒழுங்கமைக்க உதவினார்.

கிரேசு ஆலோக்கு
Grace Hallock
பிறப்புகிரேசு டேபர் ஆலோக்கு
ஏப்ரல் 10, 1893
மில்டன், நியூயார்க்கு
இறப்புஆகத்து 17, 1967(1967-08-17) (அகவை 74) [1]
நியூபர்க்கு, நியூயார்க்கு
தொழில்எழுத்தாளர்
தேசியம்அமெரிக்கர்
காலம்1922–1950
வகைசிறுவர் இலக்கியம், உடல்நலக் கல்வி

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் நடுப்பகுதி வரை ஆலோக்கு எழுதிக் கொண்டிருந்தார். ஆலோக்கின் பல புத்தகங்கள் உடல்நலம் மற்றும் அறிவியல் சிக்கல்களை விளக்கின. புளோரன்சு நைட்டிங்கேல் மற்றும் தொழில்முறை செவிலியம், மேரி கியூரி என்பவை சில உதாரணங்களாகும். இவ்விரண்டு நூல்களும் எல்த்து ஈரோசு என்ற தொடரின் ஒரு பகுதியாக மெட்ரோபொலிட்டன் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டன.[2][3][4]

1928 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தி பாய் ஊ வாசு என்ற சிறுவர் நூலுக்காக கிரேசு டேபர் ஆலோக்கு 1929 ஆம் ஆண்டு நியூபெரி விருது வழங்கப்பட்டது.[5]

கிரேசு ஆலோக்கு 1967 ஆம் ஆண்டு காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Grace Taber Hallock, 74, Wrote Youth Health Books". The New York Times. August 19, 1967. https://query.nytimes.com/gst/abstract.html?res=9D06E4DB1F3AE63ABC4152DFBE66838C679EDE. பார்த்த நாள்: June 20, 2017. 
  2. "Grace Taber Hallock". JacketFlap.com.
  3. Hallock, Grace; Turner, Clare Elsmere (1959). Florence Nightingale and the Founding of Professional Nursing. Health heroes. Metropolitan Life Insurance Company.
  4. Hallock, Grace; Curie, Eve (1917). Marie Curie. Health heroes. Metropolitan Life Insurance Co.
  5. "Newbery Medal and Honor Books, 1922–Present". American Library Association. பார்க்கப்பட்ட நாள் 2009-12-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேசு_ஆலோக்கு&oldid=3419377" இலிருந்து மீள்விக்கப்பட்டது