கிர்பால் சிங் பதுங்கர்
கிர்பால் சிங் பதுங்கர் (Kirpal Singh Badungar) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சீக்கிய கோயில்களான குருத்துவாராக்களையும் பிற சீக்கிய வழிபாட்டுத் தலங்களையும் மேலாண்மை செய்யும் பொறுப்புள்ள இந்திய அமைப்பான சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழுவின் முன்னாள் தலைவராகவும் இவர் இருந்தார்.[2]
கிர்பால் சிங் பதுங்கர் | |
---|---|
சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் தலைவர் | |
பதவியில் 27 நவம்பர் 2001 – 27 சூலை 2003 | |
முன்னையவர் | ஜக்தேவ் சிங் தல்வாண்டி |
பின்னவர் | குர்ச்சரன் சிங் தோஹ்ரா |
பதவியில் 5 நவம்பர் 2016 – 28 நவம்பர் 2017 | |
முன்னையவர் | அவ்தார் சிங் மக்கர் |
பின்னவர் | கோபிந்த் சிங் லாங்கோவல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 சனவரி 1942[1] பதுங்கர் கிராமம்,(now in பாட்டியாலா மாவட்டம், பஞ்சாப்) |
அரசியல் கட்சி | சிரோமணி அகாலிதளம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகிர்பால் சிங் பாட்டியாலாவின் பதுங்கர் கிராமத்தைச் சேர்ந்தவராவார். கிராமப்புற பின்னணியைக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் பதுங்கர் கிராமப்புற மக்களுடன் நன்கு இணைக்கப்பட்டிருந்தார். பாட்டியாலா பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஞானி பட்டமும் பின்னர் ஆங்கிலப் பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சிரோமணி அகாலிதளத்தில் சேருவதற்கு முன்பு சில ஆண்டுகள் ஒரு பள்ளியில் கற்பித்தல் தொழில் செய்தார்.[3] 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஐந்து ஆண்டுகள் சிரோமணி அகாலிதளத்தின் செயலாளராகப் பணியாற்றினார். சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவராக 2001 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 2016 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையும் பணியாற்றினார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kirpal Singh Badungar www.singhbrothers.com. Retrieved 28 March 2020.
- ↑ Former President of SGPC பரணிடப்பட்டது 2020-03-04 at the வந்தவழி இயந்திரம் sgpc.net. Retrieved 28 March 2020.
- ↑ Kirpal Singh Badungar chosen as new SGPC chiefஇந்துஸ்தான் டைம்ஸ் பார்த்த நாள் 28 மார்ச் 2020.
- ↑ கிர்பால் சிங் பதுங்கர் எஸ்ஜிபிசியின் புதிய தலைவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பார்த்த நாள் 28 மார்ச் 2020.