பட்டியாலா மாவட்டம்

இந்தியப் பஞ்சாபில் உள்ள மாவட்டம்
(பாட்டியாலா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பட்டியாலா மாவட்டம் (Patiala district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பட்டியாலா ஆகும். இம்மாவட்டம் பஞ்சாப் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

பட்டியாலா மாவட்டம்
ਪਟਿਆਲਾ ਜ਼ਿਲ੍ਹਾ
மாவட்டம்
மோதி பாக் அரண்மனை, பட்டியாலா
மோதி பாக் அரண்மனை, பட்டியாலா
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
தோற்றுவித்தவர்பாபா ஆலா சிங்
தலைமையிடம்பட்டியாலா
பரப்பளவு
 • மொத்தம்3,430 km2 (1,320 sq mi)
மக்கள்தொகை
 (2011)‡[›]
 • மொத்தம்18,95,686
 • அடர்த்தி550/km2 (1,400/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
147001
தொலைபேசி குறியீடு எண்பட்டியாலா: 91-(0)175, ராஜ்புரா: 91-(0)1762, சமனா: 91-(0)1764, நபா: 91-(0)1765 & அம்லோ: 91-(0)1768
எழுத்தறிவு75.28%
சட்டமன்றத் தொகுதிகள்9
தேசிய நெடுஞ்சாலைகள்NH 1, NH 64, NH 71
இணையதளம்patiala.nic.in
பஞ்சாப் மாநிலத்தின் மாவட்டங்கள்

அமைவிடம்

தொகு

இம்மாவட்டத்தின் வடக்கில் பதேகாட் சாகிப் மாவட்டம், ரூப்நகர் மாவட்டம் மற்றும் மொகாலி மாவட்டங்களும், மேற்கில் சங்கரூர் மாவட்டம், வடகிழக்கில் அரியானா மாநிலத்தின் அம்பாலா மாவட்டம் மற்றும் பஞ்சகுலா மாவட்டங்களும், கிழக்கில் அரியானா மாநிலத்தின் குருச்சேத்திர மாவட்டம், தென்மேற்கில் அரியானாவின் கைத்தல் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் பட்டியாலா, ராஜ்புரா, நாபா, சமானா, பட்டரன் என ஐந்து வருவாய் வட்டங்களும்; பட்டியாலா, ராஜ்புரா, நாபால் பட்டரன் மற்றும் சமனா என ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

தொகு

இம்மாவட்டம் வெட்டும் கருவிகளும், மின் கம்பி வயர்களும், மிதி வண்டிகளையும், வேளாண் கருவிகளையும், பூச்சி மருந்துகளையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. மேலும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.

கோதுமை, நெல் மற்றும் கரும்பு இம்மாவட்டத்தின் முக்கிய விளைபொருட்களாகும்.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,895,686 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 59.74% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 40.26% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.62% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,002,522 ஆண்களும் மற்றும் 893,164 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 891 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 3,325 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 570 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 75.28% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.20% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 69.80% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 212,892 ஆக உள்ளது. [1]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 1,059,944 (55.91 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 783,306 (41.32 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 40,043 (2.11 %) ஆகவும், கிறித்தவ, பௌத்த, சமண சமய மக்கள் தொகை மிகக் குறைவாக உள்ளது.

மொழிகள்

தொகு

பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டியாலா_மாவட்டம்&oldid=3030435" இலிருந்து மீள்விக்கப்பட்டது