கிர்மென் சைல்லா

இந்திய அரசியல்வாதி

கிர்மென் சைல்லா (Kyrmen Shylla) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஐக்கிய சனநாயகக் கட்சியின் அரசியல்வாதியாக மேகாலயா மாநில அரசியலில் செயல்பட்டார். மேகாலயாவின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். மேகாலயாவின் ஆளுநரான கங்கா பிரசாத், மாநிலத்தில் மேகாலயா சனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணியில் அமைச்சரவையின் அமைச்சர்களில் ஒருவராக பதவியேற்றார். அப்போது பதவியேற்ற அமைச்சர்களில் இவர் இளைய அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[1]

மான்புமிகு
கிர்மென் சைல்லா
Kyrmen Shylla
சட்டமன்ற உறுப்பினர், கிளீக்ரியாத்து சட்டமன்றத் தொகுதி]]
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
முன்னையவர்இயசுட்டின் தகார்
தொகுதிகிளீக்ரியாத்து சட்டமன்றத் தொகுதி
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், சமூக நலத்துறை, கலால் துற அமைச்சர், மேகாலயா அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 நவம்பர் 1988 (1988-11-22) (அகவை 35)
கிளீக்ரியாத்து, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஐக்கிய குடியரசுக் கட்சி
வாழிடம்(s)சட்டமன்ற உறுப்பினர் மாளிகை, சில்லாங்
வேலைஅரசியல்வாதி, வணிகர்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

கிளே சைல்லா மற்றும் கோர் சிம்ப்லி தம்பதியருக்கு மகனாக கிர்மென் சைல்லா பிறந்தார். இவருடைய தந்தை சைதியா இல்லா தன்னாட்சி மாவட்ட குழுவின் முன்னாள் உறுப்பினர் ஆவார். கிர்மென் சைல்லாவுக்கு பதினைந்து உடன்பிறப்புகள் உள்ளனர். இவர் அக்குடும்பத்தின் ஆறாவது குழந்தையாவார். கிர்மென் சைல்ல ஒரு தொழிலதிபராகத் திகழ்ந்தார்.

கல்வி

தொகு

கிர்மென் சைல்லா 2004 ஆம் ஆண்டில் கிளீக்ரியாத்து மேல்நிலைப் பள்ளியில் இருந்து தனது மேல்நிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழை, பெற்றுள்ளார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

கிர்மென் சைல்லா 2018 ஆம் ஆண்டு ஐக்கிய சனநாயக கட்சி வேட்பாளராக கிளீக்ரியாத்து தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

தேர்தல் பதிவுகள்

தொகு

2018 ஆம் ஆண்டில் கிரிமென் சைல்லா கிளீக்ரியாத்து தொகுதியில் ஐக்கிய சனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, மாநில சட்டமன்றத்திற்கான தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் 8181 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய சனதா கட்சியின் இயசுட்டின் தகரை எதிர்த்து [2] வெற்றி பெற்றார்.

ஐக்கிய சனநாயகக் கட்சி

தொகு

கிர்மென் சைல்லா மேகாலயா அரசியலில் ஐக்கிய சனநாயகக் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இக்கட்சியின் சார்பாகவே போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

அரசாங்கத்தில் பதவிகள்

தொகு

கிர்மென் சைல்லா தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூக நலத்துறை, கலால் துறை ஆகியவற்றின் பொறுப்பாளராக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

கிர்மென் சைல்லா திருமணம் செய்து கொள்ளவில்லை. 2019 ஆம் ஆண்டில் தனது வீட்டில் கைவிடப்பட்ட ஒரு பெண் குழந்தையை தனது குடும்பத்திற்கு தத்தெடுக்க அவர் ஆர்வம் காட்டினார். [3] [4][5][6] [7]

மேற்கோள்கள்

தொகு
  1. Today, Shillong (6 March 2018). "Meghalaya gets youngest minister". shillongtoday (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 June 2021.
  2. "🗳️ Kyrmen Shylla winner in Khliehriat (ST), Meghalaya Assembly Elections 2018: LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
  3. A Chief Minister By Chance
  4. "Krymen Shylla of UDP Youngest Among Meghalaya Ministers". The Shillong Times. 6 March 2018. http://theshillongtimes.com/2018/03/06/krymen-shylla-of-udp-youngest-among-meghalaya-ministers/. பார்த்த நாள்: 6 March 2020. 
  5. HSPDP MLAs Want To Serve People By Being In The Government
  6. Myneta
  7. "Kyrmen Shylla keen to adopt infant abandoned near his house". East Mojo. 2 November 2019. https://www.eastmojo.com/news/2019/11/02/meghalaya-minister-keen-to-adopt-infant-abandoned-near-his-house/. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்மென்_சைல்லா&oldid=3841594" இலிருந்து மீள்விக்கப்பட்டது