கிர் மாடு (Gir cow) என்பது இந்தியாவின், நாட்டு மாட்டு வகைகளுள் ஒன்று. இவை உருவில் பெரியவையாகவும், பார்ப்பதற்கும் எழிலார்ந்தவையாகவும் உள்ளவை.

பிரேசில் நாட்டில் சோதனைக்காக வளர்க்கப்படும் இந்திய கிர் பசுக்கள்

பூர்விகம்

தொகு

இந்த இனம் குஜராத் மாநிலத்திலுள்ள கத்தியவார் எனும் இடத்திற்கு அருகேயுள்ள கிர் காடுகளில் தோன்றியது. இவ்வகை மாடுகள் பெருமளவில் அழிந்துவிட்டதால் குஜராத் மாநில அரசு பிரேசில் நாட்டிடமிருந்து இந்த மாடுகளின் 10,000 உயிரணு குப்பிகளை வாங்கி இனப்பருக்கம் செய்ய 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த மாடுகளை இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் பாவ்நகர் மகாராஜா பிரேசில் நாட்டிற்கு நல்லெண்ண அடிப்படையில் பரிசாக வழங்கிய கிர் மாடுகளின் வாரிசுகள் அங்கே அதிகமாக வாழுகிறது.[1]

தோற்றமைப்பு

தொகு
  • இதன் தோல் செவ்வலை நிறத்தில் மிருதுவாக இருக்கும்.
  • சில வகை கிர் பசுக்களுக்கு வெள்ளை புள்ளிகள் இருக்கும்.
  • இதன் தலை பெரியதாகவும், நெற்றி விரிவடைந்ததாகவும், கண்கள் அரை தூக்கத்தில் இருப்பது போல் தோற்றம் அளிக்கும்.
  • காதுகள் நீண்டு சுருண்டு இருக்கும்.
  • எடை : 310-335. கிலோ.

இதர குறிப்புகள்

தொகு
  • முதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள் - 1550.
  • ஈத்து இடைவெளி - 520 நாட்கள்.
  • நாளொன்றுக்கு பால் கறக்கும் திறன் : 10-18 லிட்டர்.
  • நன்மை செய்யக்கூடிய கொழுப்புச்சத்து-4.4%

மேற்கோள்கள்

தொகு
  1. மாடுகளின் அழிவு சொல்வது என்ன? இந்து தமிழ் 20 பிப்ரவரி 2016

மாடுகளை பாதுகாக்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்_மாடு&oldid=3630478" இலிருந்து மீள்விக்கப்பட்டது